நாடு தமிழ் நாடு

 ஒரு அயல்நாட்டு நட்புக்கு தமிழ்நாடும் ரெஸ்ட் ஆப் இந்தியாவும் எப்படி வேறு வேறு என பல்லடுக்குகளில் ரமணா விஜயாகாந்தம் போல ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பாராமீட்டர்களைக் கொண்டு எத்தனை புளி போட்டாலும் நமக்குத் திருப்தியே அளிக்கவில்லை. நல்வாய்ப்பாக, ப்ரொஃபசர் ஜெயரஞ்சன் அவர்கள் எப்போதோ சொன்னது சட்டென மைண்டுக்குள் வந்தது. வட நாட்டின் அரசியல் என்பது அம்பானியும் அதானியும் மட்டும் காசு கொழிக்க எத்தனை பேரின் வயிறு காய்ந்தாலும் பரவாயில்லை என்பது. முடிந்தவரை ஏனையோரை அழித்தொழித்து அ&அ வின் கொடியை நங்கூரமாய் நாட்டுவது. அவர்களின் கண்ணோட்டமே ஹைரார்கி சார்ந்தது. ரெண்டு பேர் பத்தாயிரம் படி ஏறுவது. (மற்றவர் அதள பாதாளத்தில் கிடப்பினும்)


தமிழ்நாட்டின் அரசியலென்பது பத்தாயிரம் பேர் ஒரு படி முன்னேறுவது. I think nothing can precisely explain tamilnadu politics better. 


முதன் முதலில் இந்த அனாலஜியைக் கேட்டபோது இது அநியாயமென்றே பட்டது. அது எப்படி மத்தவர்களுக்காக ஒருவர் தன் முன்னேற்றத்தை சுலோவாக்கிக் கொள்ளலாமென. பிறகுதான் இந்த மியாவாக்கி டைப் strategyயின் shared benefitsசை உணர முடிந்தது. 


பெங்களூரிலோ பம்பாயிலோ கூட காணலாம். சிட்டியைத் தாண்டினால், சில இடங்களில் சிட்டிக்குள்ளேயே கூட ரோடுகள் பொளந்தமேனிக்கு இருக்கும். ஆனால் நம் தமிழ்நாட்டில் ஃபலூடாவில் கிடக்கும் நீள் சேமியா போல சிற்றூர்களை இணைக்கும் சாலைகள் கூட வழுக்வழுக்கென்று கிடக்கும். 


இதோடு சேர்த்து பொக்குனு குத்தறாப்ல பத்து பாய்ண்ட் பஞ்ச்சாக சேர்த்து எப்போதும் மனப்பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்கையில் பட் பட்டென அயல்நாட்டவர்களிடம் பாம்ப்லெட் நீட்ட.


=-=-=-=-=-=

ஒரு காமடி சீன்ல வரும் (எஸ்விசேகர்னு நெனைக்கிறேன். சரியா நெனவில்ல. கண்ணாடி கழட்டுனா எனக்கு காது கேக்காதுங்கன்னு. சிறு வயதுல அந்த அபத்தக் காமடிக்கி சிரிச்சதுண்டு. இப்பல்லாம் சிரிக்கறதில்ல. ஏன்னா வாழ்க்கையே ஒரு அபத்தம்தானேங்குற வயசு வந்துருச்சு. கண்ணாடி லூசாருக்குன்னு டைட் பண்ண டைட்டன் சோரூமுக்கு சமீபத்துல போனப்ப அங்க பாத்த இந்த அடடைஸ்மண்ட் கண்ணாடி-காது கேக்காது ஜோக்க ஞாபகப்படுத்திருச்சு. காதுமூக்குதொண்டை எண்ட்டு ஸ்பெசலிஸ்ட்டுக ஒட்டுக்கா வைத்தியம் பாக்கறாப்ல மண்டைல எதுலாம் ரிப்பேராருக்கோ அதுக்குலாம் ஒக்குடுற சாமான் விக்கலாம்னு வியாபாரத்த விஸ்தீரனம் பண்ணத் துணிஞ்சிட்டானுக போல டாடா சன்ஸ். 








Comments