ஒரு பாட்டி அது பேரனுக்கு ஆசையா குளுர் ஜாக்கெட் வாங்கி குடுத்துருக்கு. அவனொரு டூகே குஞ்சுட்டீனேஜர். இந்த கலரு எனக்குப் புடிக்கல, எனக்கு வேணாம் நா போட மாட்டேனுருக்கான். பாட்டியோட மகள் நம்மகிட்ட தயங்கிட்டே கேட்டுச்சு, ஒருவாட்டி கூட யூஸ் பண்ணல ஒனக்கு வேணுமா, கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதன்னு. அது நல்லா குளிர்பிரதேச நெட்ப்லிக்ஸ் சீரிஸ்லலாம் போட்டுட்டு வருவானுகளே அப்பிடி மொதமொதப்பா இருந்துச்சு. கிட்டத்தட்ட நூறு நூத்திருவது யூரோ. அடர் பச்சைல. போட்டுகிட்டா தனலடுப்ப ஒடம்பச் சுத்தி வச்சுக்கிட்டாப்ல அத்தன கதகதப்பு. மைனஸ் நாலுல போட்டு ஒரு வாக் போயும் பாத்தாச்சு. இதம் பதம் சதம். இதப்போயி வேணாம்னுருக்கானேனு அவம்மேல பரிதாபம் வந்தாலும் அடடே இவன் இப்பிடி சொன்னதாலதான் நமக்கு இப்பிடி ஒரு ஐரோப்பிய ஐட்டம் கெடச்சுதுனு சந்ததோச நிம்மதிப் பெருமூச்சுவும் வந்துச்சு. அவனவன் எடுக்கின்ற முடிவுகள்ள்ள்ள்...
=--=-
and you are goin to hell
Comments
Post a Comment
Pass a comment here...