அபூர்வ சிங்கீதம் பாத்தமட்டில் அதிலிருந்து கற்ற பாடங்களாவன, அந்த குரூப்பே பயங்கர டிசிப்லின், passion மற்றும் ஸ்பிரிட்டோட இருக்குது. எடுத்துக்குட்ட ப்ராஜக்டுகளெல்லாம் ஆரம்பிக்கறப்ப எப்பிடி எக்ஸிக்யூட் பண்றதுன்ற தெளிவு இல்லாட்டாலும் ஆரமிச்சுட்டு they found a way to crack the hurdles. Also எதாச்சும் ஒர்க்கௌட் ஆவலன்னா அதத் தூக்கிப்போட்டுட்டு வேற வகையில முயலவும் தயங்கவே இல்ல. Highest degree of agility. சிங்கீதம் is an OG personality. அவரோட ஹ்யூமரும் சரி, ஆளாவும் சரி, யுனீக்கா இருக்காப்டி. And he is not faking or playing for the dias. தன்ன திட்ற ஒருத்தன, நீ நல்லா திட்றய்யா இன்னொருக்கா திட்டிக்காட்டுன்னு சொல்றதுலாம் ப்யூர் கலை mind. பாக்கற படிக்கிற எல்லாத்துலயும் மெட்டீரியல் தேடுற வெறி. ஒரு சொலவடை சொல்லுவானுகல்ல, எழுத்தாளன் உன் மேல் காதல் வயப்பட்டால் உனக்கு மரணமே கிடையாதுன்னு... அந்த மாதிரி டைப் சிங்கீதம், நல்லத எல்லாம் படைப்பாக்கிடனும்னு இன்னமும் துடிப்போட இருக்காப்டி.
மொத்த சீரிஸ்லயும் ஓவர் பர்பாமன்ஸ் பண்ணது சித்ரா அரவிந்தன் ஃப்ரம் சோஷல் மீடியாதான். ஒரு சுத்தசுமார் காமடி வந்தாக்கூட எனக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம் நா மொதல்ல சிரிச்சிக்கறேன்னு பொக்கக்கேக்கேனு நடிப்ப போட்டுட்டிருந்தான். அவன் சிரிச்சதவிட நா எப்பிடி சிரிக்கிறேன் பாருங்கன்றத காட்டுற முஸ்தீபுதான் தெரிஞ்சுது.
சுவையான பிரியாணிய சாப்புடுறப்ப ஒரு வாய்ல கிராம்போ ஏலக்காயோ மாட்டினா பரவால்ல, ஒவ்வொரு மறுவாய்க்கும் மாட்டினா என்ன பண்றது? இப்பிடித்தான் இருந்துச்சு ஆசினி மேடமும் அவங்க தங்கை இம்சினி மேடமும் ஊடால கெடந்து உருண்டது.
போலவே ஏஆர். அவர ஏன் ஆட்டைக்கி சேத்தாம்ங்கன்னே தெரியல. அந்தாளு வந்து ஆத்தா வையும் ஆத்துக்கு போனும் ஐடியா குடுன்னுட்டே ஆஸ்க்கிட்டு இருந்தாப்டி. ஆக மொத்தம் சினித்துறையில கற்பனா வறட்சி திங்கடி.திங்கடினு ஆடுதுனு தெரியுது. ஐடியாக்கிட்டங்கிகளுக்கு வாய்ப்பிருக்கான்னா வாய்ப்பிருக்கு. ஆனா வசதிகள் கிடைக்குமான்னா சந்தேகந்தான்.
பெஸ்ட்டு ராஜா கமல் சிங்கீதம் பேசினது. சொல்லப்போனா நாலு நாளைக்கும் அவங்கள தன்னப்போல பேசுங்கய்யானு விட்டுட்டு தூரத்துலருந்து வீடியோவையும் ஆடியோவையும் கேப்ச்சர் பண்ணிருந்தாலே போதும். எழுவதக்கடந்த பெருசுக உக்காந்து பேசுறது இவ்ளோ இன்ஸ்பயரிங்கா இருக்க முடியும்னு நெனச்சுகூட பாக்கல.
And வைரமுத்து. நோ கமண்ட்ஸ் சிம்ளி வேஸ்ட்.
sayans:
Comments
Post a Comment
Pass a comment here...