Essence of south india என்று சொல்லி சமீபத்தில் ஒரு வீடியோ பார்க்க நேரிட்டது. மேரியம்மாவின் தேர்ப்பவனிக்கு ஒரு இந்து கற்பூரத்தட்டு காட்டி கும்பிடுவதும், மேரிக்கோவிலில் ஒரு சாம்ப்ராணி பாய் புகை போட்டு வணங்குவதுமாக இருந்தது அக்காணொளி.
அக்காணொளியில் இருந்தோர் இதோ மதநல்லிணக்கம் என்றோ, இதுதாண்டா மதம் கடந்த நேயம் என்றோ, அவ்வளவு ஏன், தாம் வீடியோ பிடிக்கப்படுகிறோம் என அறிந்தோ கூட அவற்றைச் செய்யவில்லை.
பொதுவாக, தன்னைத் தளர்த்தி பொதுவைப் பிடிக்கும் பொதுக்குணம் சவுத்துக்குண்டு. வடக்கும் தெற்கும் சர்வைவலுக்குத் தான் போரிடுகிறது எனினும், போரிடும் முறையில் தான் வித்தியாசம். எவன் எக்கேடு கெட்டாலென்ன, அழிந்தொழிந்தாலென்ன, எனக்கு பான்பராக் துப்ப சுவர் வேணும் எனும் பீ-ட்டிட்யூட் யூநோஹூக்களுக்கு உண்டு. நமக்கோ, அதிராமல் உதிராமல் பூப்போல தேவைகளை நிறைவேற்ற வேணும் எனும் ஆட்டிட்யூட்.
ஒரு நல்ல நாளில், பண்டிகை நாளில் எதுவும் படிப்பு சம்மந்தமானவை /பரிட்சை இருந்தால் நாம் பண்டிகை, கொண்டாட்டத்தைக் கைவிட்டு பாடத்தைக் கவனிப்போம். இதுவே அவன்கள் (இப்படி வீ வெர்சஸ் தெம் எனச் சொல்லுவதே தவறு எனும் உரையாடல்கள் உண்டு. ஆனால் அவன்களை வேறு எப்படித்தான் குறிப்பிடுவது பின்னே?)... இதுவே அவன்களாயிருந்தால் படிப்புக்கு லீவ் விட்டு பண்டிகையைக் கொண்டாடியிருப்பான்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. பரிட்சை நடைபெறும் பில்டிங்கை பண்டிகையன்று பண்டிகைக்கு இடையூறாக இருக்கிறதெனக் கொளுத்தி விடுவான்கள்.
நமக்கு இரண்டு மூன்று வயதுகள் இருக்கையில், அல்லது நான்கு ஐந்து கூட இருந்திருக்கலாம். கடும் காய்ச்சலாம். நாள் கடந்து வாரமாகியும் விடவில்லையாம். ஊசி மாத்திரை எல்லாவற்றையும் முயன்று விட்டிருக்கின்றனர். எதிலும் சரியாக வில்லை. If my memory is correct, அப்போதுதான் முதன்முறை மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா பாடலை தொலைக்காட்சியில் பார்த் அல்லது கேட்டேன். கடும் ஜுரத்தில் கேட்டதால் அந்தப்பாடலும் ஜுரமும் மெமரியில் மேப் செய்து கொண்டன. இப்போது வரை மீனம்மா பாடலைக் கேட்டால் தலை வலிக்க ஆரம்பித்து விடும், ஒரு மாதிரி நாசியா ஃபீலிங் வந்துவிடும். இதோ இந்த நொடி இதை டைப் செய்கையில் மண்டைக்குள் மீனம்மா பாடல் ஒரு புறம் ஒலிக்கிறது, லேசாக தலை வேதனையும் வருகிறது. Weird.
விசயம் அதுவன்று. நமக்கு மட்டுமின்றி அப்போது குடும்பத்திலிருந்த மற்றொரு குஞ்சுகுளுவானுக்கும் நாட்பட்ட ஜுரம்.
மேற்கொண்டு என்ன செய்வது என்றறியாத தாய்மாமரொருவர் அவரின் நண்பரின் பரிந்துரையின் பேரில் பெரியபாளையம் மாரியம்மனுக்கு கூழ் ஊத்தியிருக்கிறார்.
அந்தளவுக்கு ஆர்த்தடாக்ஸ்த்தனமெல்லாம் இல்லாத பாய்மார் வீடுதான் என்றாலும் இப்படி மாற்றார் தோட்டத்து மல்லிகையைச் சூடிக் கொண்டதெல்லாம் இப்போது வரை ஆச்சரியம் தான்.
சில நாட்களில் அல்லா அம்மாவால் நடந்ததோ அல்லது ஊசி மாத்திரைகள் வேலை பார்த்ததோ, அடுத்த சில நாட்களில் சுரம் நீங்கி பாடல்கள் பாடத்துவங்கியாயிற்று.
இப்போதுவரை பாட்டினியார் அவர்கள் சிறுவயது கதைகளைப் பேசுகையில் அந்தக் காய்ச்சலையும் அக் காலத்தில் தாய்மாமனார் அவர்கள் அலைந்த அலைச்சலையும் அவர் ஊத்திய பெரியபாளையத்தம்மன் கூழையும் நினைவு கூராமல் கதையை முடிப்பதில்லை.
இப்படிச் செய்வதெல்லாம் சரியா தவறா எனக் கேட்டால் ரூமி சொன்னது நினைவுக்கு வருகிறது...
Out beyond ideas of wrongdoing and rightdoing there is a field. I'll meet you there.
மேற்கண்ட அந்த ஃபீல்டில் தான் தமிழ்நாடும் ஓரளவு சவுத்தும் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது.
=-=-=-=-=-=-=-=-=-
அயராத வேலைப்பளுக்களின் காரணமாக (வேறென்ன, ஊர் பொறுக்கறதுதான்) துவாலிங்கத்தைத் தொட்டே மாசங்களாவுது. கில்ட்டியாக்கவும் திரெட்டன் பண்ணவும் புஷ் நோட்டிபிகேசன் அனுப்புவான். பர்மிசன் இருந்தாத்தான கழுத்துல கத்தி வெப்பன்னு அத அமத்திப்போட்டேன். எலெ தப்பிக்கவா பாக்குறன்னு இப்பிடி ஐகான மாத்தி உட்டு சப்ட்டிலா துப்பறான். கிரியேட்டிவ் தான். இந்த மாசம் மீண்டும் துவோவ தூசு தட்டணும்.
Comments
Post a Comment
Pass a comment here...