நமக்கு சென்சிடிவ் நோஸு. அதும் சும்மா சென்சிடிவில்ல அதியல்ட்ரா சென்சிடிவ். வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு ஊழல் வழக்குல ஊதுவத்தி உருட்டின ஜெவுக்கு பாக்கறது பூராம் பச்சையா தெரியனும்னு ஒரு காமடி பண்ணி வச்சிருப்பானுகல்ல, அந்த மாதிரி பக்கத்துல எங்க பேட் சுமல் இருந்தாலும் அப்சார்ப் பண்ணி தலவேதனைய குடுக்கும் மூக்கு நமக்கு. மூக்கு இல்ல மூக்கு இல்ல முட்டபத்திரி பேக்கு.
செவுடா இருக்கவன் சத்தமா பேசுவாங்கறாப்ல இப்பிடி நான்சன்ஸ் நாத்தங்களால் அவதிப்படுறதாலயே நெறய பர்ஃப்யூம் போடுற வழக்கம் வந்துருச்சு. ஆனா பாருங்க நம்ம பேரு நம்மள விட அடுத்தவங்களுக்குத்தான் அதிக யூசாவறாப்ல நாம்போடுற பர்ப்யூமும் மத்தவன் கமகமத்துக்கெடக்க யூசாவுதே தவிர நமக்கு வாசனைய பரப்பறதில்ல.
அடுத்தவனுக்கு பேடா சுமெல்லக்கூடாதுனு பாத்து பாத்து ஃப்ராக்ரன்ஸ் தெளிச்சுட்டு போறோம் நாம. நம்ம பக்கத்துல வந்து உக்கார்றவனுக குபீர் நாத்தத்தோடதான் வரானுக. அந்த வேர்வை ஊறிப்போயி அது தர்ற பாண்ட நாத்தமிருக்கே யப்பா. இப்பிடியாப்பட்ட ஆபத்காலங்களுக்குன்னே பைக்கட்டுல எப்பவும் செண்ட்டு வச்சிக்கிறது. ஆனா இப்பிடி குபீர்நாத்தத்தோட ஒருத்தன் வந்ததும் நாம செண்ட்டெடுத்து மோந்து பாக்கறது ரூடா இருக்குமேன்னு அவனுக கெளம்பற வர வெய்ட் செய்ய வேண்டி இருக்கு. அதுவரைக்கும் மூக்குல வெரல தடுப்பாப்போட்டு உள்சேர்க்கை காத்த பில்டர் பண்ணி கொஞ்சமா சுவாசிச்சு உயிர் பொழைக்கக்குள்ள தாவு தீந்துடுது.
ஒங்கள சவ்வாதும் பன்னீரும் சந்தனமுமாச் சேத்து கமகமக்கவெல்லாம் சொல்லலடா. அட்லீஸ்ட் bad odourராச்சும் இல்லாம இருங்கடா. மனுசப்பிறவியா எப்பத்தாண்டா மாறுவீங்க வக்காளோலிகளா.
=-=-=-=-
Comments
Post a Comment
Pass a comment here...