வருசத்துக்கு ஒருத்தர் இப்பிடி சோமீல சிக்கிக்கிறாப்ல. இந்த வைராலிட்டிலாம் வரதுக்கு முன்னமே பாப்புலரானவர் கட்ட காக்கா (கீழக்கரை அல்லது காயல் அல்லது அதிராம்பட்டினத்த சேந்தவருனு நெனைக்கிறேன்.)
அப்பல்லாம் புலூடூத்லதான் ஒரு போன்லருந்து மறு போனுக்கு ஃபைல் ட்ரான்சர் பண்ண முடியும். அப்பவே அவர் ரொம்ப ஃபேமசாருந்தாப்டி.
இது போன்ற டெலிபோனிக் கான்வர்சேசன் வைரலாகுறது வேற. இப்பிடியாப்பட்ட வைரல் ஒலித்துணுக்குக ஏகப்பட்டது கெடக்கு. மல்லு ஒருத்தன் கல்ஃபுல ஆடர் எடுக்குறது, ஹரஹரமஹாதேவகி, ஏர்டெல் கம்பியில உக்காந்துருக்கவன், பம்பர் பரிசு கால் இந்த மாதிரி ஏராளம்.
நபர்களா பேமசானவங்கன்னா மன்னை சாதிக், ஜிபிமுத்து, பிஜிலி ரமேஷ், இப்பிடி தனி லிஸ்ட்.
இது மொத்தத்துலயும் எரிச்சலடையற விசயம் என்னன்னா கண்டநேரத்துல கண்டவனுக போன் பண்றதுதான். கட்ட காக்காவ நேரங்காலம் பாக்காம கால் பண்ணி கடுப்பேத்திட்டு இருந்தானுக. இதுல பாத்தா அந்த விக்டிம்களுக்கு ஒருவித இன்னொசன்ஸ் அல்லது இயலாமை இருக்குது. அதுதான் அவங்களோட பொதுத்தன்மையா இருக்கு. இவனுக mobபாவும் சுய அரிப்புலயும் போன் பண்ண, அவங்க எரிச்சலடஞ்சு இயலாமைல திட்ட, அந்தக் கோவத்தப்பாத்து சிரிக்கிறது எவ்ளோ பெரிய வக்கிரம்?
அதுவும் இப்பிடி ஒருத்தர் இருக்கார்னதும் மானாவரியா அவரோட நம்பர ஷேர் பண்ணி மாத்தி மாத்தி வதைச்சதுலாம் எப்பேர்ப்பட்ட குற்றம். அந்தாளு எதோ டிராவல்ஸுல வேல பாத்துட்டிருந்தார்னு நெனைக்கிறேன். ஒரு விளிம்பு நிலையில இருக்கவரோட பொழப்ப இவனுக கொழுப்புக்கு செதச்சிருக்கானுக. ஒரு சமூகமா இதுக்கு அவமானப்படனும். ஆனா அந்த ஆடியோ க்லிப்புகள ஆரவாரமா பகிர்ந்து சந்தோசம் அடஞ்சிட்டிருந்தோம்.
என் சொந்தக்காரன் ஒருத்தன் திடீர்னு நைட்டு ஒரு பன்னண்டு ஒரு மணி இருக்கும். கால் பண்ணான். என்னவோ ஏதோனு பதறிப்போயி எடுத்தா கட்டகாக்கா நம்பர் கெடச்சுது. அதான் வேணுமானு கேக்க பண்ணேன்னான். 2005/6 சமயம் இருக்கும். திட்டிட்டு வச்சுட்டேன். என்ன மனநிலைல மக்கள் இருக்காங்கன்னே புரிஞ்சுக்க முடியல.
2013/14 சமயம்னு நெனைக்கிறேன். ஆபிஸ்லருந்து வீட்டுக்குப்போக ஒரு அதி அதி அதி கூட்டமான பஸ்ஸு, அப்பறம் ஒரு ஷேராட்டோ புடிச்சுதான் வீட்டுக்கு போக முடியும். அனல்ல வெந்து கூட்டத்துல நொந்து நஞ்சுபோயி நைட்டு எட்டுபோல ரிட்டன் போயிட்டிருக்கப்ப திடீர்னு ஒரு புது நம்பர்லருந்து கால். ஒரு லேடி வாய்ஸ். எதோ பேச ஆரமிச்சிது, யாருங்க நீங்கனு கேட்டா எடக்குமடக்கா பேசி திட்ட ஆரமிச்சிருச்சு. தப்பான நம்பர் போட்டுட்டீங்கனு சொன்னா பேர்லாம் கரெக்டா சொல்லுது. கட் பண்ணினா மறுக்கா கால். அப்பறந்தான் அதுவரைக்கும் லேடிஸ் வாய்ஸுல பேசின ஒருத்தன் அது ப்ராங்க் கால்னு சொல்றான். அவன் எதோ ஆர்ஜேவாம். வெங்கியோ இல்ல வேற பேரோ, மறந்துட்டேன் இப்ப. நான் இருந்த ஒரு குரூப்ல அவனும் இருக்கானாம். அதுலருந்து நம்பர் எடுத்து
கால் பண்ணானாம். இப்பிடி அவன் பாக்கற நம்பருக்குலாம் கால் பண்ணி ப்ரான்க் பண்றது ஹாபியாம். ஏன்னா அவர் ஆர்ஜேவாம்.
இப்பிடி பொதுவுல ஒரு நம்பர் இருந்தாலேயே கால் பண்ற உரிமை வந்துருமா? அப்ப உன் வீடும் பொதுத்தெருவுல தான இருக்கு, ங்கொம்மாள வந்து....னு வாய் வரைக்கும் வந்துருச்சு. அவன் நல்ல நேரம். ஆனா அந்த தெவ்டியாத்தாயளிய என்னைக்கு பாத்தாலும் ஒரு அப்பு வெக்கிறது உறுதி.
இந்தப் பெரும்பான்மை, எப்பிடி மத்தவங்கள take it for grantedடா எடுத்துக்குதுன்றதுல இருக்கு அத்தன patriarchyயும். ஒனக்கு வலிக்கிறாப்ல அவன் திரும்ப செய்றதில்லன்ற ஒரு காரணத்த மட்டுமே வச்சு தன் அரிப்புக்கு மத்தவன பலியாக்குது சமூகம்.
அந்த வகையில பாத்தா ஜிபி முத்துவ பாராட்டுவேன். இவனுக ஜாலிக்கின்னு பண்ற mob சைக்கோத்தனத்தல்லாம் செம்மயா கேபிடலைஸ் பண்ணிக்கிட்டாப்டி. கைக்காசு செலவு பண்ணி போஸ்ட், கொரியர்னு அனுப்பி வெச்சானுக. அந்தாளு அதையே தான் பாப்புலராக ஒரு டூலா யூஸ் பண்ணிக்கிட்டாப்டி. கடைசில க்லௌனுக போஸ்ட் அனுப்புனவனுக தான்.
இப்பிடி தாந்தோந்துனதுக்கு ஊர்லருக்கவன்லாம் ஆடனுங்கறவனுகள மரத்துல கட்டி வச்சு உரிக்கனும். சமீபத்துல ஒருத்தர் இப்பிடி எக்ஸ்ட்ரோவர்ட்டுக வைப் பண்ணுங்க ஜினு ஆபிஸ்ல தாலியத்தத சொல்லி குமுறியிர்ந்தாப்டி. இந்த ஒலகமே வெறும் எக்ஸ்ட்ரோவர்ட்டுக்கானதா ஆகிட்டு வருது. லொடலொடனு ஓலப்பாய்ல நாய் மோண்டாப்ல பேசிட்டு, எரும மாடு மாதிரி சொரணையே இல்லாம கண்ட எடத்துலலாம் ஆடிகிட்டு மெண்டல்களாடா நீங்க? இவனுக வைப் பண்ணுங்கஜினு குனிஞ்சிட்டே வருவானுகளாம், ஒடனே டிக்கிக்கி லோனு குடுத்துர்னுமாம். இப்பிடி தாங்கெட்டதுமில்லாம ஓரமா போறவனுகளையும் வம்புக்கு இழுக்குறவனுகள நோக்கு வர்மத்து மூலமா நரம்ப நறுக்குறாப்ல ஒரு சக்தி வந்தா நல்லாருக்கும்.
------------
கங்குஃபார்பியெம்
-=-
Comments
Post a Comment
Pass a comment here...