இங்கருக்க சில ஊர்கள் கிராமங்கள் பேரு நம்மூரு சாயல்ல இருக்குது. இதுல ஐலைட்டான பேரு ஐந்தோவன் தான். எதோ ஒரு முருகனோட அறுபடை வீட்டோட பேரு மாதிரியே இருக்கும். மிச்ச சொச்ச பேர்களோட லிஸ்ட்...
Veendam - வேண்டாம்
Vaals - வால் / வாழ்
Venlo - வெண்ணிலவு
Eindhoven - ஐந்தோவன்
Veldhoven - வெல் தோவன்டா
Edam - எடம்
Almelo - அலமேலூ
Deventer - தேவேந்தர்
Kampen - கம்பன்
Gouda - ஊதவே வேணாம்
Voorburg - ஊர்ப்பொருக்கி
Utrecht - உத்திரகோசமங்கை
Goes - கோஸ்
Kavelingen - கவலைங்கேன்
Meppel - மேய்ப்பள்
Meppen - மேய்ப்பன்
Nietap - நீடாமங்கலம்
Nijlande - நில்லேண்டே
Nuil - நீயுள்
Odoorn - ஓடோன்
Oshaar - உஷார்
Paardelanden - பார் தல ஏந்தேன்
Padhuis - பதவிசு
Valthe - வாழ்த்தே
Witten - விட்டேன்
Wittelte - விட்டேள்டே
Urk - உருக்கு
Anjum - அஞ்சும்
Anneburen - அன்னபூரன்
Appelscha - அப்பிலிச்சா
Arkens - அரக்கன்
Arkum - அருக்கும்
Arum - அரும்
Buren - பூரான்
Buttinga - புடிங்க
Cornjum - கொஞ்சும்
Cornwerd - கோன்வேடு
Dokkum - டொக்கும்
Dongjum - டொஞ்சும்
Domwier - தொம்முவீர்
Doniaga - தோனியாக
Driesum - திரீசம் (இது இந்திய இல்ல, உலகப்பொதுமொழி)
Drogeham - துரோகம்
Echten - எட்டன்
Edens - எடேன்
Ee - ஈ (ஷாலினிக்கள்)
Engelum - எங்களும்
Gauw - கோ (வடக்கன் மொழி)
Genum - கெணம்
Goutum - யப்பா கௌதமு
Grouw - கொறொ
Harich - ஹரிஷ் ராகவேந்திரா
Indijk - இந்திக்
Janum - ஜனம்
Bilthoven - பில்தோவண்டா
Kinnum - கின்னம்
Kollum - கொல்லும்
Kollumerpomp - கொல்லுமேற்பவம்
Kooten - கூட்டேன்
Koudum - கொடும்
Laaxum - லக்ஷம்
Lankum - லங்கம்
Lekkum - லெக்கும்
Lollum - லொள்ளும்
Makkinga - மக்கிங்க
Makkum - மக்கும்
Mantgum - மடங்கும்
Marrum - மாறும்
Miedum - மீடும்
Morra - மொற
Moskou - மொசுக்கு
Munnekebaayum - முன்னக்கபாயும் (மாப்ளைக்கி அவ்ளோ வெறி)
Munnekeburen - முன்னக்கபூரேன் (பொண்ணுக்கும் அவ்ளோ வெறி)
Naarderburen - நாரதர்பூரேன்
Nijelamer - நீலமர்
Nijemirdum - நிமிர்ந்தும்
Oosthem - ஒஸ்திமாமே
Oudega - ஓடுக
Parrega - பாருக
Pingjum - பிஞ்சிரும்
Polle - எலே போலே
Sonnega - சொன்னீங்க (2கே குஞ்சான்ஸ் படைப்புலகம்)
Tzummarum - இதுமாறும்
Uiteinde - ஊட்டாண்டே
Vaardeburen - வார்த்தபுடுங்குறேன்
Warga - வருக
Wier - வீர்
Wolvega - வாழ்வீக
Aam - ஆம்
Baal - பால்...லவ...
De Kade - டீக்கடை
Gameren - கமரன்
Gellicum - கெலிச்சும்
Ingen - இங்கேன்ருங்கோ இங்கேருங்கோ
Kapel - கப்பல்
Kilder - கீழ்த்தர
Kotten - கொட்டேன்
Manen - மானேன்
Ooij - ஓய்
Pol - போல்
Tonden - தொண்டன் கனி
Tolkamer தொல்காமர்
Tongeren - தொங்கறேன்
Tricht - திருச்சி
Tuil - துயில்
Uddel - உடல் பொருள் ஆனந்தி
Vaassen - ஐ கேர்
Aalsum - ஆல்சும் விக்சும்
Bedum - பேடுக்குயில்
Ewer - எவர்
Haren - ஹரி
Hekkum - டைகர் கா
Kolham - கொள்ளாம்
Marum - எல்லாம் மாறும்
Munnekemoer - முன்னேற்கமர்
Muntendam - முன் தெண்டம்
Onnen - ணொண்ணேன்
Polen - போலேன்
Sellingen - செல்லிங்கன்
Siddeburen - சித்த பொறேன்
Sint Annen - சிண்ட் அண்ணன்
Suttum - விழிச்சுடர் தான் கண்ணம்மா
Tange - தாங்கித்தாங்கி
Thesinge - தேசிங்கு ராஜா
Tinallinge - தினல் இங்கே அனல் எங்கே
Ulrum - உள்ரூம்
Veele - வேலே
Veendam - வேண்டாம்
Aan de Popelaar - ஆண்டை பொழப்பிலார்
Amby - அந்நியன்
Annendaal - ஆனென்றால்
Bunde - புன்னகை
Dal - டல் திவ்யா
Echt - எட்டு
Everlo - எவர்லோ சேசி
Andel - ஆண்டாள்
Kade - பொட்டக்காடே
Kalishoek - களி சோக்கு
Macharen - மச்சாரேன்
Made - மாடே
Maren - மாரன்
Meeren - மீறேன்
Meerven - மீறுவேன்
Neerkant - நீர்கண்டன்
Neerlangel - நீரிலாங்கல்
Neerloon - நிருலோன்
Oekel - ஓக்கல்
Olen - ஓலன் சீமான்
Putte - புத்தி
Raam - ரகிபதி ராகவ..
Uden - உடேன்
Uppel - பூரி
Veen - வீண்
Velmolen - வெல் மாலன்
Ven - வெண் பனி மலரே
Venbergen - வெண் பருக்கன்
Veneind - வெனை இந்த
Vrachelen - விரக்கீலன்
Aalsmeer - ஆல்சமீரா
Bakkum - அக்கும் பக்கும்
Kolhorn - கொல்லோன்
Krabbendam - கிரபந்தம்
Monnickendam - மாணிக்கம்
Naarden - நாரதன்
Petten - பேத்தன்
Ane - ஆணி
Den Nul - தென்னல்
Junne - போடாச் ஜுன்ன்...
Marle - மாறிலி
Oele - ஓலே
Ommen - ஓம்மன்
Onna - ஒன்னே ஒன்னா?
Rande - ரெண்டே ரெண்டு
Vasse - ஏபிசி நீ வாசி
Ameide - அமைதியோ அமைதி
Kanis- கனிந்த
Maarn - மாறன்
Akkerput - அக்கறைப்பேடு
Eede - ஈடு
Paal - பால்
Val - வால்
Veere - வீரே
Vlaardingen - விளாடுறீங்க
Saba - நாரத கான
=-=-=-=-=-=-=-=-=-=-=-
சொல்!
-=-=-=-=-=-=-=-=-
இரண்டு ஐடியாக்கள்:
1.
ஹேங்கோவரின் தமிழ்ட்டப்பிங் மிகப்பிரசித்தம். அஃபிசியலான டப்பிங்கைச் சொல்லவில்லை. ஒரு மதுரை குரூப்பு செய்தது. மில்லியன் கணக்கில் விய்வுகள் பிய்த்துக்கொண்டன. அதேபோன்ற மற்றொரு சகாப்தம் படைக்க வேண்டுமென்றால் மாமன்னன் படத்தில் ஒவ்வொரு வடிவேலுவின் சீன் இடை மற்றும் இறுதியிலும் வடிவேலுவின் கௌண்ட்டர்களையே எடுத்துப்போட்டால் போதும். ஆச்சரியமாக அந்தக் கௌண்ட்டர்களுக்கான ஸ்பேசும் சைலன்சும் திரைக்கதையிலேயே அமைந்திருக்கிறது. வேற எந்த எடிட்டும் தேவையில்லை. படம் ஓடுகிறபோதே வடிவேலுவின் முந்தைய அவ்வ்வ்வ் முதல் ஆஹான் வரை சேர்த்தாலேயே போதும். பார்ப்போம் எந்த எடிட்டன் முந்திக்கொள்கிறானென.
2.
இதுவரை எண்ணற்ற படங்களின் BTSகளும் மாஸ்டர்க்லாஸ்களும் வந்தாலுமே ஒரே ஒரு விடயம் மட்டும் இன்னும் கேள்விப்பட்டதாகவே இருக்கிறது. அது டைரக்டர் நரேட் செய்வது. திரைத் தயாரிப்பு நிறுவனங்ளோ அல்லது தரமான ரிவ்யூக்கம்பனிகளோ (அப்படி எவனும் இருக்கிறானா என்ன?) இதைச் செய்யலாம். டைரக்டர்களை ஒன் லைனைச் சொல்ல வைத்தும், படக்கதையை நரேட் செய்ய வைத்தும் வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளலாம், பட ரிலீசுக்குப் பின், ஓடி ஆடி ஓய்ந்தபின் இதை ரிலீஸ் செய்யலாம். திரைக்கதைப் புத்தகங்கள் எப்படி திரை மாணவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்கள் அனைவருக்கும் சினிமாவை இன்னும் ஒரு எட்டு கிட்ட இருந்து பார்க்க வைக்கிறதோ அப்படி இந்த நரேசன்கள் இன்னும் பல திறப்புகளை உண்டாக்கும். படம் சொன்னதையே தான் எடுக்கிறார்களா அல்லது எங்கெல்லாம் எப்படியெல்லாம் திரிகிறது என்ற காட்சியும் புலப்படும். ஒரே விசயம் தான். பட சூட்டிங்குக்கு முன்னமே இது ரெகார்ட் செய்யப்பட வேண்டும். சில டைரக்டர்கள் பட ரிலீசுக்கப்பறம் திரைக்கதை புக் எழுதி போங்கு செய்தது போல் செய்யக்கூடாது. அதே சமயம் ரிகார்ட் செய்யப்பட்ட வீடியோவை மிகமிகமிகப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். தப்பித்தவறி இல்லீகலாக லீக் செய்பவரை சூத்தைக் கிழிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடினம். பலமில்லியன் வியூ ஐடியா இது. பார்ப்போம் யார் முந்துகிறார்களென.
-----
kubeer
Comments
Post a Comment
Pass a comment here...