பணிக்கூலி

1. Money

2. Fame

3. Fun

4. Learning

5. Contacts (Network)

பணியோ ஹாபியோ எது செஞ்சாலும் இதுல ஏதாவது ஒன்னாவது இருக்கறாப்ல பாத்துக்கறது நலம். ஒன்னுக்கு மேல கெடச்சா அது well and good. ஆனா ஒன்னு கூட கெடைக்கலன்னா அப்ரூட்டா கட் பண்ணி தூர வீசுறது நலம் பயக்கும். Having said that, சோமீடியால எண்ட்லஸ் ஸ்க்ரோல் பண்றேன், அது எனக்கு ஃபன் தருதுன்னு சொன்னா அது கிறுக்குக்கூலித்தனம். வாரமாதம் போறது தெரியாம endless scroll பன்றது fun இல்ல, அடிக்‌ஷன். அதுலேந்து எவ்ளோ எவ்ளோ சீக்கிரம் தப்பிக்கிறீங்களோ அவ்ளோ நலம். இந்த அஞ்சுமே கெடைக்கற ப்ரொஃபஷன் எதுன்னு யோசிச்சா சினிமாவத் தவிர வேற தோணமாட்டுது.  

=-=-=-=-=-

Master. Class. 




இந்தியா வரைபடம்:



*-*-*-*

sub standard title:

ரீசண்ட்டா பாத்த ஒரு படத்துல கண்ட சப்டிட்டில் இது. காரோட முகப்புக்கண்ணாடில ஒருத்தன் செங்கக்கல்லக் கொண்டி எறியிறான். அதுல கார்கண்ணாடி தூளாவுது. சப்டைட்டில் எழுதுனவன் தமிழா இல்ல மலையாளமானு தெரியல (அந்தப் படமும் தமிழா மலையாளமான்னும் தெரியல. ரெண்டு மூனு நாள் முன்ன தான் பாத்தது, மறந்நு போயி. வயசாயி).
அது கெடக்கட்டும். கண்ணாடிய அவன் அட்லீஸ்ட் க்லாசுன்னாச்சும் டைட்டில் குடுத்துருக்கலாம். ஆனா அவன் கண்ணாடின்னா மிரர் தான வரும்னு அவசர அடியில போட்டு உட்டுருக்கான். Glassசுக்கும் Mirrorருக்கும் வித்தியாசமுண்டுன்னு அந்த பாலகனுக்கு அல்லது பாலகளுக்கு யார் சொல்லிப் புரிய வெக்க? அவனுகளுக்கு இந்த ஆனா ஆவன்னா தெரிஞ்சாத்தான அது windshieldடுங்குற ஏபிசிடி அடுத்து வெளங்க வரும்? ஆனா இதுக்கும் ஒரு பே-செக் வாங்கிருப்பானுகல்ல? நாம இங்கன உக்காந்து கூழுத்தி என்னத்த... 



Comments