ரீசண்ட்டா ஒரு இன்ஸ்டா பையன் ஆக்சிடெண்ட்ல எறந்த செய்தி கண்ல பட்டுச்சு. பைக்ல அதிவேகம் போல. ஹெல்மட் போட்டுருந்தா தப்பிச்சிருக்கலாமனு சிலர் சொல்லிட்டிருந்தாங்க. அடிபட்ட ஒடம்ப பாத்தப்ப ஹெல்மட்லாம் இருந்தாலும் தப்பிச்சிருக்க முடியாதுன்னு தான் பட்டுச்சு. நாடிக்கி கொஞ்சம் முன்ன தள்ளி கையி துண்டா ஒடஞ்சிருந்துது. எல்லாத்துக்கும் ஆடியோ சேத்து ஃபில்டர் போட்டு மொய் வைக்கிற இன்ஸ்டா கூட்டம் அந்தப்பையன் இறுதி ஊர்வலத்தையும், பொதைக்கற எடத்துலயும், அடிபட்ட உடலையும் வச்சும் ரீல்ஸ் தேத்திருந்துது. அதோட சேத்து அந்தப்பையனோட வீட்டுக்காரம்மாவும் மீடியாவ கூப்ட்டு வச்சு அழுதுட்டிருந்துது. பாக்க விடல சடங்கு எதும் செய்ய விடலன்னுட்டு. என்ன செய்ய விடலனு பாத்தா தாலியறுக்க விடல எங்க சடங்குப்படி எரிக்க விடலன்னுச்சு. எரிச்சா அவருக்கு வலிக்கும்தான் இருந்தாலும் எங்க சடங்க செய்ய விட்டிருக்கலாம்னதும்தான் புரிஞ்சது, ஆக இங்க செத்தவனுக்காக எவனும் அழறாப்ல தெரியல, பாடிய சாண்ட்விச் போடுறதா இல்ல பேக்கிங் பண்றதானு அடிச்சிட்டிருந்துருக்கானுக. அப்பதான் தோணிச்சு, நம்ம எதுவாருந்தாலும் தெளிவா சொல்லி வச்சிருறது நல்லதுன்னு. ஆகவே இதையே நம்மளோட இறுதிக்கிரய ஆசையா எடுத்துக்கோங்க மக்களே. தப்பித்தவறி கூட, ஐ ரிப்பீட், தப்பித்தவறி கூட எம்பாடிய எரிக்க உட்டுறாதீங்க. அப்பிடி எதும் பண்ணா ஆவியா வந்து கொன்னெடுத்துருவேன். அதான் எரிச்சாச்சே அப்பறம் எப்பிடி வருவனு கேக்கக்கூடாது. எரிச்சப்பறம் திரிஷ்யம் 3ஏ வரப்போவுது. என்னால முடியாதா? ஆகவே, எரிச்சிற மட்டும் செய்யாதீங்க. உள்ளபடியே ஆசை ஒடம்புல எந்த பாடிபார்ட்ஸ்லாம் ரீயூஸ் பண்ண முடியுமோ, அத எடுத்து தேவைப்படுறவங்களுக்கு பொருத்தினா மகிழ்ச்சியடைவேன். எஞ்சி இருக்க துண்டு துக்கடாக்கள படிப்புக்காக மெடிகல் யுனிவர்சிட்டிக்களுக்கு குடுத்துரலாம். சப்போஸ் நமக்கு அப்போதைக்கு கூட வச்சு சோறு போட்டுட்டிருக்கவங்க இத ஒத்துக்கலன்னா பொதைக்கவே செஞ்சிருங்க. மண்ணுக்கு ஒரமாகட்டும். ஆல்சோ எங்க செத்தனோ அந்த ஊருலயே பொதைச்சிருங்க. தேவையில்லாம சொந்த ஊருக்கு கொண்டு போறேன், வீட்டுக்கு கொண்டு போறேன்னுலாம் அலைச்சலோ செலவுகளோ வேணாம். சட்டுபுட்டுனு செலவில்லாம சிக்கனமா முடிச்சிருங்க. போலவே மூனாம்பங்காளியோட ஏழாம் சகல வந்து மூஞ்சிய பாக்கனும்னுலாம் யாருக்காகவும் வெய்ட் பண்ண வேணாம். எவ்ளோ குய்க்கா இறுதி வேலைகள முடிக்க முடியுமோ முடிச்சிருங்க. அப்ப சொல்ல முடியாது, இப்பவே சொல்லிக்கிறேன், என்னால அடுத்து ரிட்டனுக்கு எதுவுமே செய்யமுடியாதுன்னு தெரிஞ்சும் பெய்ன் எடுத்து இவ்ளோ இறுதி உதவிகள் செய்யப்போறமைக்கு தேங்ஸ்.
----
உடலினைப் பேணுக:
Noted!
ReplyDelete