உலகின் எல்லை

எல்லையில்லாத யுனிவர்சுனு கதைகள்லயும் அறிவியல்லையும் படிச்சிருக்கோம். எல்லைகளுள்ளவை எவைனு பாத்தா கொஞ்சம் இன்ஸ்ட்ரஸ்டிங்கா சிலபா விசயம் காணக் கிடைக்குது. நல்லா பிசிக்ஸ் படிச்சவங்களுக்கு இது போரிங் டாப்பிக் அல்லது இன்ஃபர்மேசன் தான். ஆனா தெரியாதவங்களுக்கு இது புதிய இன்பமேசன். 

இன்னத விஞ்சவே முடியாது, அது எது? அப்டின்னதும் லைட்டோட வேகத்தன்னு கொழந்தை கூட சொல்லும். எங்கூட்டு கொழந்தை சொல்லாதுன்னு சொன்னிங்கன்னா you are raising it wrong. பிசிக்ஸ் பயாலஜி கணக்கு சொல்லிக்குடுக்காம புடுங்கறதுக்கா புள்ள பெத்தீங்க என்று அறிஞ்சர் அரிஸ்டாட்டில் கேட்பதாக தகவல்களுண்டு. எது எப்படியோ, லைட்டோட வேகத்த யாராலயும், எதாலயும் மிஞ்சவே முடியாதுன்றது அன்னப்போஸ்டா எல்லாரும் ஒத்துக்கறது. 



ஹெட்ரான் கொல்லைடர்ல கூட ப்ரோட்டானுகள நுப்பது கிலோமீட்டர் ஓட விடுறது கூட ஒளியோட வேகத்துல 99.9999991% தானேயொழிய 100%ல இல்ல. அதான் 99.99 வந்துருச்சே, 0.0000009ல என்ன ஆகிடப்போவுது, அந்த மிச்ச புள்ளி பூச்சியம் ஒம்போதுல என்ன இருக்குன்னு கேட்டா அதுக்குள்ள தான் எல்லாமே இருக்கு. அந்த இத்துனூண்டுல செக் வெச்சுதுல்ல? அதான் வர்கீஸு. அது இயற்கை நம்மளப்பாத்து சொல்ற 'I exist, therefore I am'டா வக்காளிகளாங்கற statement.


சரிப்பா, லைட்டோட வேகம் மட்டும்தான் உச்சமா? வேற நம்மனால மீற முடியாத, தாண்ட முடியாத வேற எதுவுமே இல்லியான்னா? ஏன் இல்ல?


சுரேஸ்: ஒரு பகிட் தண்ணிய வெளிய வச்சா என்னாகும்?

முரேஸ்: என்னாகும்? ஆவியாகும்.

சுரேஸ்: அதான் இல்ல, ஐஸ் ஆகும். 

முரேஸ்: எப்பிடி?

சுரேஸ்: ஏன்னா நா வச்சது அண்ட்டார்ட்டிகால. ஹஹ் ஹஹ் ஹ்ஹ

சிரிங்ங சிரிங்ங சந்த்தோஸமா இருங்க. 

மேல சொன்னது ஒரு லேடரல் திங்கிங் ஜோக். லேட்டாதான் புரியும். எந்த விசயத்தையும் காண்டெக்ஸ்டோட யோசிக்கணும். எடுத்தோம் கவுத்தோம்னு இருந்தா இப்பிடித்தான் பத்து பாஞ்சு வருசத்துக்கு பேயோட கெடந்து உருள வேண்டி வரும். 

சரி, ஒரு பகிட் தண்ணிய குளுர வச்சா ஜில்லுனு ஆவும். இன்னும் ஜில்லேத்துனா? ஜில்லோன்னு ஆவும். இன்னும் ஜில்லாக்கினா ஐஸாகும். ஐசானப்பறமும் ஜில்லக்கூட்டினா? ((ஜீன்ஸ் கால)ஐஸ்வர்யாராயானா எப்பிடி இருக்கும்?)

ஐசானப்பறமும் வெப்பத்த கொறச்சா நல்லா கட்டியான ஐசாவும். அது சரி, இப்பிடியே கொறச்சுட்டே போனா? இச்சாதாரி பாம்பு துப்பற நாகமாணிக்கக் கல்லாட்டம் ஆவுமான்னா மைர்ல ஆவும். அப்பிடி இறுகல் கூடக் கூட அதோட உறுதித்தன்மை பட்டுப்போயி ஒடையக்கூடியதா ஆகிரும். 

தண்ணிக்கி சரி, பொதுவா எந்த பொருளையும் இப்பிடி கூதலாக்கிட்டே எவ்ளோ தூரம் போக முடியும்னா அதுக்கும் ஒரு லிமிட் வச்சிருக்கு உனிவர்ஸ். அத ஆங்கிலத்துல Absolute zeroம்பானுக. அதாவது 0 கெல்வின். -273.15 degrees Celsius. அண்டசராசரத்துல இதுக்கும் கீழ போகவே முடியாது. தமிழ்நாட்டுல ஒரே ஒரு அரசியல்வாதியும் இந்தியாவுல ஒரு கட்சியும் இத விட கீழ போக முடியும்னு அரசியல் சர்காச வட்டாரத்துல சொல்லுவாங்க, அது நமக்குத் தேவையில்ல. ஆக, இந்த -273.15 டிகிரி செல்சியஸ்தான் நம்மால போக முடியிற குளிர்விப்பான் எல்லை. அதுக்கும் கீழ ஒங்க எவனாலயும் போகமுடியாது, ஏன்னா, I exists, therefore I am அப்புடிங்கிது இயற்கை. 

குளுருக்கு அப்சலூட் ஸீரோ சரி, இதுக்கு ஆப்போசிட்டா எதாச்சும் சீட்டு இருக்கணும்ல? அதுவும் இருக்கு. அதுக்குப்பேரு ப்லாங்க் வெப்பம். Blankக்குன்னு படிக்காதிங்க, Planck. ப மெல்லினம் இல்ல, ப வல்லினம்.  எப்பிடி ஸீரோ கெல்வினுக்கும் கீழ எதையும் குளிர்விக்க முடியாதோ அதே மாதிரி 1.416×10^32 K கெல்வினுக்கு மேல அண்டத்துல எதையும் சூடு பண்ணி டீக்காப்பி குடிக்க முடியாது. அப்பிடி சூடு பண்ண முற்பட்டா அந்த இஞ்சின் சூடாவி ஆவி பறக்க ஆரமிச்சிரும். 

இந்த மாதிரி ஏகப்பட்ட கட்டம் கிழிச்சு நம்மள ஒரு வட்டத்துக்குள்ளயே வச்சு பொம்மலாட்டம் ஆடுது இயற்கை. இப்பிடிலாம் பண்றியே ஏன்னு கேட்டா I exist, therefore I can அப்டின்னு சொன்னாலும் சொல்லு. எமத்திருடன் இயற்கை. 



+=+

குபீர்



Comments