ஒரு சில புது விசயம் பழகினதும் முந்தி நாம பாத்த விசயங்கள்ல எவ்ளோ அபத்தம்/ஆபத்து இருக்குன்றது ஒரைக்கிது. இங்க பஸ்ஸு ரயிலு எல்லாத்துலயும் ஆட்டமடிக் கதவிருக்கு. கதவு மூடாம வண்டி நவுறாது. போலவே காத்தாட ஜன்னல்லாம் இல்ல. எல்லாமே கண்ணாடி போட்டு சீலடிச்சது. முழுக்க ஏசி. ஏசியோ ஏசி. கக்கிசு மொதக்குன்னு ஏசி. குளுர் காலத்துல சூடாருக்கும் வெக்க காலத்துல ஜில்லுனு இருக்கும்.
இப்பிடி முச்சூடா மூடி மூடியே பயணம் செஞ்சுட்டு நம்மூரு லோக்கல் ரயில பாத்தா அது எவ்ளோ ஆபத்தானதுனு தோணுது. பப்பரப்பேனு தொறந்த மேனிக்கி, யாரும் எப்பவும் தவறி விழலாம். அல்லது வெளியருந்து எதும் உள்ள விழுந்தா ரயில் போற வேகத்துக்கும் அதுக்கும் எப்பேர்ப்பட்ட சேதம் விளைவிக்கும் உள்ள இருக்கவங்களுக்குனு நெனச்சாலே அன்னீசியாவுது. ஒரு காலத்துல பஸ்ல ஃபுட்போர்டடிச்சுட்டு போன நாமளா இப்பிடி லகுவாகிட்டோம்னு ஆச்சரியமா இருக்கு.
ஒரு வேள இதுதான் எவல்யூசனா, அல்லது அனுபவப்படுதலா அல்லது வயசாகுதலா அல்லது புஸ்ஸியாயிட்ட அறிகுறியா?
-
போல்டு & பியூட்.. போல்டு & போல்டா தன்ன காட்டிக்க விழையும், காட்டிக்கும் குந்தானிககூட காட்சிப்படுத்தறதுக்கு ப்ரெய்னோ ஐடியாக்களோ முன் வைக்க மாட்டுதுக. பட்டக்சையும், அல்மோஸ்ட் அம்மணக்குண்ட்ஸ் ஒடம்பையுந்தான் கடைவிரிக்கிதுக. அக்காவ அங்க புடிச்சுதான் தூக்குவியாங்கறாப்ல ஸ்வாக் ஆட்டிட்யூட அக்குள்லயா வச்சிருக்குதுங்க? இதுக்கு காட்டன் பண்டில் கிட்டங்கியிலயே இருந்துருக்கலாமே?
Comments
Post a Comment
Pass a comment here...