அயல்நாட்டிலே...

அயல்நாட்டிலே ஒரு கிசும்பு புடிச்சவன் அவனோட ஏற்றிறக்குமதி தொழில்பண்டத்துக்கு Maxim Cargoனு பேரு வச்சிருக்கான். 

---

அயல்நாட்டிலே சிற்றுலாச் செல்லுகையில் அங்கிருக்கும் ஸ்லம்வாழ்க்கை எப்படியிருக்கிறது என்றறிய ஓர் நகருலா செல்லப்பட்டது. அப்போது ஒரு வீட்டுத் திண்ணை போன்ற வாசலிலும் கதவு நிலையிலும் சற்று உள் வாசலிலும் மூன்று வாண்டுகள் குப்புறபடுத்துக்கொண்டு ஆளுக்கொரு சுமார்ட் போன் வைத்துக்கொண்டு கேம்சு ஆடிக்கொண்டிருந்தனர். அடுத்தடுத்த வீடுகளிலும் காணப்பட்ட ஒருவரோ இருவரோ, தனித்தீவில் வாய்த்த ஒரே நங்கூரம்போல் ஒரு மொபைலைப் பற்றிக்கொண்டு சுற்றத்தை மறந்திருந்தனர். எல்லோர் கண்களும் நிலைகுத்தியிருக்க ஒவ்வொரு செல்போன். 

இந்த ஜெனரேசனிலாவது இது ஒரு அடிக்சன், அதைக் குறைக்க, தடுக்க முற்பட வேண்டும் எனும் குரல்கள் எழுகின்றன. இதற்கடுத்தாற்போல் வரும் ஜென்னானது செல்போனில்லாத உலகத்தையே பார்த்திராதது, அதற்கு செல்போன் என்பது பேசிக் நெசசிட்டியில் சேர்ந்துவிடும். அதற்கடுத்த ஜென், பேசிக் ரைட்சில் சேர்க்க, அதன் பின் வரும் கூட்டம் செல்போன் அளிக்கப்படாவிட்டால் அதை அப்ரஷனில் கொண்டு போயும் சேர்த்து விடும். ஃபன்னியர் டைம்ஸ் அஹெடு. 

-=-=-=-=-


நம்மூரிலே இன் கேஸ் ஆப் பயர் மட்டும்தானே இருக்கும். இங்கு பாருங்கள் கூத்தை. இதுதான் அயல்நாடென்பது. 





அயல்நாடெனினும் அங்கும் சில ஆதிகால செட்டுகள் இருக்கத்தானே செய்கின்றன... 




அதென்னது? ஆங்... எவிரிதிங் ரிமைண்ட்ஸ் மி ஆப் ஹர்...





கண்டங்கள் தாண்டினாலும் சிங்கமாய்ச் சீறிவரும் நடமாடும் ஆட்மன் எஸ்டியார்!




என்னதான் அயல்நாடென்றாலும் எவ்வளவு தான் வளந்து கெட்டாலும் இன்னம் சிலப்பல சகுண சௌச்சால்யங்களை எல்லாவனும் கடைபிடித்தே கிடக்கிறான்கள். ஏம்ப்டா உள்ளுக்குள்ள அத்தன ஸ்பேர்பார்ட்ஸ் பழுதுனால பொளந்துட்டு போகாதது வெறும் பில்டிங் நெம்பர்லியாடா பூன குறுக்கால பூரப்போவுது? அயல்நாட்டிலே இதுவும் இருக்கிறது நண்பர்களே...




Comments