சுந்தரி

சினிமாக்காரர்கள் பல விசயங்களுக்கு பொதுவில் அழுது பார்த்திருப்போம். அதில் ஃபிரீக்வண்டாக வருவது விலங்குகளைப் படங்களில் பயன்படுத்த முடியவில்லை, ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டு அரசு தாலியக்கிறது என்று. இதனாலேயே க்ராபிக்சில் விலங்குகளை உருவாக்குவதாகவும் அது தத்ரூபமாக வராததால் சினிமா ரசிகர்களுக்கு நல்ல அனுபவம் கிடைப்பதில்லை எனவும் அங்கலாய்ப்பர். 

மனிதர்கள் இதுவரை காணாத டைனோசர் முதல் அனகோண்டா வரை அத்தனை தத்ரூபமாகக் கம்ப்யூட்டர் மூலம் கொண்டு வர முடிகிறது இதே உலகில்தான். இங்கே சிஜி சரிவர செய்யமுடியவில்லை என மூக்குறுஞ்சிகள் அதிகம்.

அதெல்லாம் கிடக்கட்டும். இப்போது விலங்குகளைப் பயன்படுத்த முடியவில்லை எனும் இவர்கள் ஆதிஹாலத்திலே டேக்கிட்ஃபார்க்ராண்ட்டடாக செய்த வேலைகளைக் கண்டால் கண்ணில் கன் வைத்து சுட்டாற்போல் ரத்தம் வரும். 

சுந்தரி பாட்டை இப்போது எடுக்க முடியாது. அல்லது சென்சார் அனுமதிக்காது. சமீபத்தில் வந்த ரீரிலீசில் இந்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்தனவா என்பதும் தெரியவில்லை. 

போர்/சண்டைக் காட்சிகளில் பாவம் அந்தக் குதிரைகள் படும் சித்திரவதை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது தெரியவில்லை. அவை கழுத்து மடங்கித் தலைகுப்புற விழும் காட்சிகள் பெரும்பாலும் அவை பங்குபெறும் அத்தனை சண்டைக்காட்சிகளிலும் காணலாம். அந்த ஸ்டண்ட் எனும் கொடுமைக்குப் பின் அந்த குதிரைக்கு கழுத்தெலும்பு முறிவு ஏற்படுமா, அல்லது உயிரோடுதான் இருக்குமா என்பதுவும் தெரியவில்லை. 

இந்த ஸ்டண்ட்டை எப்படிச் செய்வார்களென்றால், குதிரைகளில் பின்னங்கால்களில் கயிற்றைக் கட்டிவிட்டு அதை ஓட விடுவர், கயிறு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். வேகமாக ஓடும் குதிரை கயிற்றின் நீளம் முடிந்ததும் தடுக்கித் தலை குப்புற விழும். (இது ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் கொடுத்த பேட்டியில் பார்த்த ஞாபகம்). இப்போதும் சுந்தரி பாட்டில் இடம்பெறும் போர்க்காட்சிகளைப் பாருங்கள், அந்த குதிரைகள் படும் பாட்டைக் கூர்ந்து கவனியுங்கள், you will lose interest in watching any war movie.  நொடி நேர சர்க்கசுக்காகவும் சொற்ப காசுக்காகவும் வாயில்லா அந்தஜ் ஜீவனை இவர்கள் படுத்திய பாடுதான் கர்மா இஸ் அ கஸ்தூரி என்ற கதையாய் மாறி தற்போது புழு பூச்சியைப் பயன்படுத்தவும் தலையால் தண்ணி குடிக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுள்ளது. 

இன்று இதே சுந்தரி பாட்டை மணிசார் எடுக்க முயன்றால் இந்தக் காட்சிகளை வைக்க முடியாது. அப்படிச் செய்தால் மணிசாரின் அண்டர்வேரை அவுத்துவிடுவார்கள். 













-------

Preposition பயில்வதன் நன்மைகள். 



-----

வாழ்க்கையின் ஒப்பற்ற தத்துவம் மற்றும் உண்மை:



Comments