꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

குளிருது🌓குளிருது

[make sure your 🔊 is turned ON]


⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆



⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆

𝕀𝕟 𝔾𝕣𝕖𝕖𝕜 𝕞𝕪𝕥𝕙𝕠𝕝𝕠𝕘𝕪, 𝕤𝕚𝕣𝕖𝕟𝕤 𝕨𝕖𝕣𝕖 𝕕𝕒𝕟𝕘𝕖𝕣𝕠𝕦𝕤 𝕔𝕣𝕖𝕒𝕥𝕦𝕣𝕖𝕤, 𝕠𝕗𝕥𝕖𝕟 𝕕𝕖𝕡𝕚𝕔𝕥𝕖𝕕 𝕒𝕤 𝕓𝕖𝕒𝕦𝕥𝕚𝕗𝕦𝕝 𝕨𝕠𝕞𝕖𝕟 𝕨𝕚𝕥𝕙 𝕖𝕟𝕔𝕙𝕒𝕟𝕥𝕚𝕟𝕘 𝕧𝕠𝕚𝕔𝕖𝕤. 𝕋𝕙𝕖𝕪 𝕨𝕠𝕦𝕝𝕕 𝕝𝕦𝕣𝕖 𝕤𝕒𝕚𝕝𝕠𝕣𝕤 𝕨𝕚𝕥𝕙 𝕥𝕙𝕖𝕚𝕣 𝕤𝕠𝕟𝕘𝕤, 𝕔𝕒𝕦𝕤𝕚𝕟𝕘 𝕤𝕙𝕚𝕡𝕤 𝕥𝕠 𝕔𝕣𝕒𝕤𝕙 𝕠𝕟 𝕥𝕙𝕖 𝕣𝕠𝕔𝕜𝕤. 𝕋𝕙𝕖 𝕤𝕚𝕣𝕖𝕟𝕤 𝕨𝕖𝕣𝕖 𝕓𝕖𝕝𝕚𝕖𝕧𝕖𝕕 𝕥𝕠 𝕓𝕖 𝕓𝕠𝕥𝕙 𝕒𝕝𝕝𝕦𝕣𝕚𝕟𝕘 𝕒𝕟𝕕 𝕕𝕖𝕒𝕕𝕝𝕪.


⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆




வழக்கமான பேச்சுக்கள் ஓய்ந்துஇரவு அதன் vulnerable நேரத்தை நெருங்கஹவ்வா ஒரு மெசேஜ் அனுப்பினாள்.


டே

பேரமைதியான நைட்

எப்பயாச்சும் வெகு தொலைவுல போற காரோட மெல்உறுமல்.

வீசுதா கசியுதான்னே தெரியாததொடர்ந்து அடிக்கிற ஜில் காத்து.

கூட எனக்கே எனக்குன்னு இருக்கற நீ.

இப்டி நீ என் கூட இருக்குறன்றது எனக்கு எப்பிடி இருக்கு தெரியுமா

தமிழ்ல சரியான வார்த்த கெடைக்கல.

Ecstasy might be word that explains close to what I feel. 

But even then it doesn’t convey it completely. 

Ecstasy? 

You mean methylenedioxymethamphetamine? 

😂

Lol. yeah.

Yes, எனக்கும் at times நம்ம convo ஒரு vibe sync ஆகும்ல

அப்பல்லாம் நடு முதுகுல சிலிர்க்கும்

In fact சிலிர்த்துட்டே இருக்கும்.


குளிருது குளிருது பாட்ட லூப்ல கேட்ட மாதிரி.


WATTTTTHEFFFFUCK! DO YOU LIKE THAT SONG?


Like eh? 

It's one of my two most favorite songs.


அது இந்த உலகத்துக்கான பாட்டே இல்ல தெரியுமா?

YOU JUST STOLE MY WORDS

I’m SCREAMING here

அந்த song is everything to me

In fact beyond everythjng.

அத கேட்டுட்டே பேசுவோமா?

நான் இங்க ஆல்ரெடி ப்லே பண்ண ஆரமிச்சிட்டேன்.

லூப்ல போடுநைட்டு முழுக்க கேப்போம்.

இந்தப்பாட்டப் பத்தி பேச யாரும் கெடைக்கமாட்டாங்களானு 

இத்தன வருஷமா வெய்ட் பண்ணேன்

அப்பப்ப கூகுள் கூட பண்ணிப்பாப்பேன்

ஒரு சின்ன ஸ்டேட்டசாக்கூட எவனும் இதப்பத்தி எழுதினதில்ல

அடப்போங்கடா காதில்லாத கபோதிகளானு இருக்கும்.


அது ஒரு mysterious romantic பாட்டுல்ல?

Yes Indeed. Indeed.

அந்தப்பாட்டோட வரிகளும்.

I’m gonna agree to whatever you say about it

PLEASE GO AHEAD.

This is The most underrated song of AR's.


It is underrated and not noticed by humans for some reasons. 

As I said, அது இந்த உலகத்துக்கான பாட்டே இல்ல.


அது மொத்தமா சூட்சும உலகத்துக்கானது. அங்க கூட்டிட்டுப் போறது. முன்ன சொல்லிருக்கேன்ல, பூவும் இசையும் அந்த உலகத்துக்கான சாவின்னு. அதுல ஒன்னு இது. அந்தப்பாட்டோட ராகத்துல இருந்து, இசைக்கோர்ப்பு, வரிகள், அதுல யூஸ் பண்ண கருவிகள், குரல்கள் இது எல்லாமே தன்னத்தானே இயற்கையா பொருத்திக்கிட்டது.

இயற்கைகிட்ட ஒரு அம்சம் இருக்கு. தனக்கானத தன்னாலயே அமைச்சுக்கும். அது ஏன் எப்பிடினு யாருக்கும் விளங்காது. இயற்கையும் விளக்காது. ஆனா அது இயற்கை பிரத்தியேகமா செஞ்சுக்கிட்டதுன்றத காட்டறதுக்காக அதுல ஒரு அழகியல் இருக்கும், ஒரு அட factor இருக்கும், வெளிய எக்ஸ்ப்லிசிட்டா சொல்லலன்னாலும் தன்னோட சிக்னேச்சர கோடிட்டு காட்டும்.


எப்டி சொல்ற? any example?

ம்ம்...

சூரியன், நிலா, பூமி இருக்கு. எல்லாமே வெவ்வேற சைஸ், வெவ்வேற தூரத்துல இருக்கு. ஆனா எக்லிப்ஸ் அப்ப பாத்துருக்கியா? அவ்ளோ பெரிய சூரியன் இத்துணூண்டு நிலாவுக்குள்ள pixel perfectடா பொருந்திப் போகும். 

How did this happen?

😱

நிலா கொஞ்சம் பெருசாவோ சின்னதாவோ இருந்தாலோ, இல்ல sun moon earthதுக்கு இடையில இப்ப இருக்கிற தூரமில்லாம வேற இருந்தாலோ இது நடக்க வாய்ப்பே இல்ல. In fact  இப்பிடி பொருந்தனும்னு அவசியம் கூட இல்ல. ஆனா அப்பிடி பொருத்திக் காட்டுதுல்ல, அதுதான் இயற்கை "Hai friends, இப்ப எதேட்சையா என்ன நடந்துச்சுன்னா"னு சொல்லி காலர தூக்கி விட்டுக்கற முமண்ட்.

இது AR ரஹ்மான் மூலமா இயற்கை யட்சிகள் தங்களுக்குன்னு செஞ்சுகிட்ட பாட்டு.

சூட்சும உலகங்கள்ல பல வகை உண்டு. ஒவ்வொரு உலகத்துக்குமான சூட்சுமம், நோக்கம் ஒன்னுலருந்து இன்னொன்னு மாறுபடும். அப்பிடி சிருங்கார உலகத்துக்கான பாட்டு இது. அந்த உலகத்த சேந்த யட்சிகள் கொண்டாடுற பாட்டு இது. அண்டவெளியில இருந்து வர்ற அலைகள ஒலியா மாத்தி வர்ற  ஆடியோக்கள் கேட்டுருக்கியா? Blackhole, Sun இதோட சத்தம்லாம் எப்பிடி இருக்கும்னுலாம் வந்துச்சே.

ஆமா


அதே மாதிரி காமத்த இசையா மாத்தின பாட்டு இது.


அது எப்பிடி இது யட்சிகளோட பாட்டுன்னு கண்டுபுடிக்கறது?

சில விஷயங்கள் randomமா தெரியும். 

ஆனா உன்னிச்சுப்பாத்தா அதுக்குள்ள ஒரு pattern இருக்கும். 

கேக்கறவங்களுக்கு அந்த patternனும் ரொம்ப தற்செயலா அமைஞ்ச மாதிரி இருக்கும். 


ம்ம்ம்.


The song is musical version of coitus and காமம். 


காமத்துல ஆர்கசம்னு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி இந்தப்பாட்டு ஒரு Eargasm. 


Be it the raga used, வரிகள், instruments, குரல்கள்னு எல்லாமே convey பண்றது காமத்ததான்.


Each and every bit of the song. 


இந்தப்பாட்டுல புல்லாங்குழல் ஆண். நரம்புக்கருவிகள் பெண். 


There is a 40 second prelude with which the song begins right? That IS sex. 


எத்தனையோ நூறாயிரம் தடவ காமத்த அனுபவிப்போம், ஆனா முதல் முதல்ல (விருப்பத்தோட) நடக்கற அந்தக்காமத்துக்கு - அது தர த்ரில்லுக்கு - சுகத்துக்கு இணையே இல்ல. 


One can never relive that moment . எத்தனை எழுதினாலும் எழுதித்தீராது அந்தக்குறிப்பிட்ட அனுபவம். 


முதல் கலவியின்போது உடல் முழுக்க ஆர்வமும் தாகமும் இருந்தாலும் அடிமனசுல ஒரு பயம், ஒரு திக்திக் உணர்வு இருந்துட்டே இருக்கும்ல. You won't get that feel when you do it for the second time (with the same person). ஆனா ஒருத்தர் வச்சுக்கற அத்தனை செக்சும் முதல் தடவை அனுபவம் மாதிரியே இருந்தா? How blissful it will be?

There is a popular saying right? When was the last time you did something for the first time. 

First time experienceசுல கெடைக்குற delightful experience pro ஆனப்பறம் கூட கிடைக்காதுல்ல. 


யட்சிகள் உலகத்தின் காமம் இப்பிடித்தான் இருக்கும். For them, every single coitus is a, is meant to be a first time experience. அதுதான் அங்க உள்ள விதி. 


So, to be precise,  இந்தப் பாட்டு யட்சிகளின் அந்த special காமத்த சொல்றது. Keep that in mind and listen to it.


Back to the prelude, பொதுவா எப்பிடி (first) செக்ஸ் ஆரம்பிக்கும்?


ஆணுக்கு காமம் துளிர்விடும். அப்படி துளிர்த்ததும் மனசுக்குள்ள ஒரு அச்சம் வரும். காமம் மேலோங்க, ஆண் சிக்னல் குடுப்பான். பெண் கண்டும் கண்டுக்காம இருப்பா. புரிஞ்சுக்கிட மாட்டிங்கிறாளோனு நெனச்சு அவன் திரும்ப குறிப்பாலுணர்த்துவான். பெண் கண்டுப்பா, ஆனா முடியாதுன்னு சமிக்ஞைகள் காட்டுவா. அப்புறம் முடியாதுன்னு சிணுங்குவா. அவ அப்பிடி சிணுங்குறப்பவே மனத்தளவுல தயாராகிடுவா. அந்த சிணுங்கலே ஆணுக்கு காட்டிக் குடுத்துடும், அவன் கொஞ்சம் கொஞ்சமா முன்னேற, அவ ஒத்துழைக்கத் துவங்குவா. அவ ஒத்துழைச்சதும் இவங்கிட்ட கொஞ்சம் வேகம் கூடும். அதே நேரத்துல மனசுல அந்த திக்திக்கும் அதிகரிக்கும். ரெண்டு பேருக்கும் தைரியம் தான் கூடிருக்குமே தவிர அச்சம் அப்படியே தொடரும். ஆனா இத்தனை நடக்குறப்பவும் அவன்கிட்ட ஒரு ஜாக்கிரதையுணர்வு இருக்கும். திடீர்னு எதாச்சும் தப்பாகி கோச்சுப்பாளோன்னு. அதனால பூனை மெதுமெதுவா ரொம்ப carefulலா எட்டெடுத்து வெக்கும்ல, அந்த மாதிரி அவனோட calculated செயல்பாடு இருக்கும். ஒரு பொண்ண கண்ணாலதான் ஆண் பாக்கறான். ஆனா அது வேற ஒரு ஆர்கன எரெக்டாக்குதுல்ல? அதே மாதிரி, காமத்தால் தூண்டப்பட்ட பெண்ணுடல் இங்கதான்னு குறிப்பிட்டு சொல்ல முடியாம அங்கங்க விழிச்சுக்குதும்ல. அந்த அங்கமெல்லாம் இசையெழுப்பினா?



இத மனசுல வச்சுக்கிட்டு, now listen to the prelude again. ஆணின் சமிக்ஞை, பெண்ணின் சிணுங்கல், அவங்களுக்குள்ள இருக்கற அச்சம், that escalated moments இது எல்லாமே இருக்கும். 


முதல் காமத்த ஆண் தான் துவக்கி வைப்பான், பெண் முடித்தும் தொடர்வாள். 


இங்க ஃப்லூட்ல தொடங்குற prelude, stringsல முடியும். In other words, stringsசுக்கு கொஞ்சம் முன்னாடியே flute முடிஞ்சிடும் 😉 

IYKYK. 


😲😲😲😲😲


காமத்தப்போல ஒரு பரிசுத்தம், பெருங்கழிவு, உக்கிரம், போராட்டம், தியானம், மரணம், ஜனனம், eccentric, bizarre, calming, inexplicable, idiosyncratic, freaky, whimsical, nutty, kooky, quirky, kinky, outré, tranquillising, appeasing, quelling, soothing, alleviating, mollifying, hushing, conciliating மேட்டர் வேற எதுவுமே இல்ல. இப்ப நான் இத்தன வார்த்தைகள்ல சொன்னதும் கூட a group of blinds ஒவ்வொருத்தரும் யானைய தடவித் தடவிப் பாத்து வர்ணிக்கிறாப்லதான். எல்லார் சொல்றதுலையும் கொஞ்சம் உண்மை இருக்கலாம். ஆனா எதுவுமே முழுமையான உண்மை இல்ல. காமம் is the elephant living in the (bed) room. For a few, in their kitchen, and for a few, in the couch or in the stairs or in the back seat of a car, or even in the elevators. அவங்கவங்க வசதியும் அவசரத்தையும் பொறுத்து அந்த மதங்கொண்ட யானை எங்க வேணா தோன்றலாம். காமம் always leaves you wanting more. உடம்பு தற்காலிகமா டயர்டாகலாம். ஆனா ஒடம்பும் மனசும் அதுக்கு சலிக்கவே சலிக்காது.


வாழ்க்க முழுக்க தினம் மூனு வேள சாப்பாடு ஆனா No sex or 

ஒரு வேள சாப்பாடு தினம் செக்ஸுன்னு சொன்னா மனுசன் எத சூஸ் பண்ணுவான்?


மனுசன் என்ன சூஸ் பண்ணுவான்னு தெரியாது.

என்னக்கேட்டா அந்த ஒரு வேள சாப்பாடு கூட வேணாம், 

டெய்லி ஊட்டச்சத்துமிக்க அந்த செக்ஸே போதும்னுடுவேன்.


🤣🤣🤣🤣 silly 


முதல் காமம் is also the amalgamation of உச்ச வலி & பரிதவிக்கும் சுகம். வலியோ சுகமோ அதோட உச்சத்த தொடுறப்ப அதுவரை இருந்த எல்லா விதிகளும் கலைக்கப்பட்டு அந்த தருணத்துல அது வேற ஒன்னா மாறிடும். புது விதிகள் நடைமுறைக்கு வந்துடும்.


இந்த விதியியல் மாற்றத்த அந்த விதிகளோட ஜனனம் or மரணம்னு சொல்ல முடியாது. But வேறயா மாறிடுறது. Do you get what I say? 


அதி குளிர்ல கட்டியாகுற நீர், நெருப்புல விட்டா ஆவியாகிடும். இந்த தருணத்துல நீர் மரணிக்கிதா இல்ல புதுசா ஜனிக்கிதா? 


நீரும் நெருப்பும் சேந்தா நெருப்பு கொஞ்சம் அணைஞ்சு நீராகுது. நீர் கொஞ்சம் கொதிச்சு நெருப்பாகுது.


எப்பவும் பூமிய நோக்கியே போற நீர், எப்பவும் வானத்த நோக்கியே எரியுற நெருப்பு தீண்டினதும், தானும் வான் நோக்கிப்போக ஆரமிக்குது. 


நீரையே ஆவியாக்குன நெருப்பு, பூமில இருக்க தண்ணிக்குள்ள அமிழுது.


Such a fascinating behavior no?


Two things that fall in the extreme ends of the spectrum, அதனதன் புறத்துல ஆக்ரோஷமான, very aggressive and yet calming elements, ஆனா ஒன்னு கூடுறப்ப எவ்ளோ weird reaction-ல? 


காமமும் அப்பிடித்தான? It's a mystic and mysterious emotion. ஆணும் பெண்ணும் கூடுறப்பவும் இப்டியான weird கூத்துக்கள் தான அரங்கேறும்?


என்னடா சத்தமே காணோம். தூங்கிட்டியா?


No, I am spellbound.


You are bounded by a spellன்றது ஓரளவு உண்மதான் 😜


எத்தனையோ தடவ இந்த ஒரு பாட்ட மட்டுமே திரும்பத் திரும்ப லூப்ல கேட்டுருக்கேன்

அப்போலாம் CD கூட இல்ல, கேஸட் தான்

பாட்டு முடிஞ்சதும் டேப் ரிகார்டர்ல ரீவண்ட் பண்ணி திரும்பக் கேப்பேன்

காலேஜ் முடிச்சு வீட்டுக்கு வந்ததும் ஓட ஆரம்பிக்கும்

நைட் தூங்கப்போறது வரைக்கும் ஓடிட்டே இருக்கும்

எங்க வீட்ல எனக்கு பைத்தியம்னு நெனைக்க ஆரமிச்சிட்டாங்க

இதுக்குன்னே பார்ட் டைம் வேலைக்கு போயி ஒரு சோனி வாக்மேன் வாங்குனேன்

TDK கேசட் வாங்கி அதுல ரெண்டு சைடுலயும் 

இந்தப்பாட்ட மட்டும் ரெகார்ட் பண்ணி வச்சுக்கிட்டேன்

அதுக்கப்பறம் எப்பவும் இந்தப்பாட்டுதான் கேப்பேன்

To this day, I really don't understand what made me get hooked on to this song

This is the only song that I have heard the most in my life.


எல்லாரும் இவன் ஏன் இந்தப்பாட்ட இப்பிடி கேக்கறான்னு ஆச்சரியமா பாத்தாங்க

எனக்கோ இந்தப்பாட்ட கேக்காம எப்பிடிடா உங்க உலகம்

இயங்க முடியுதுன்னு கொழப்பமா இருந்துது.


நீ இன்னைக்கு இந்தப்பாட்ட சொன்னதும் எனக்கு மட்டுமில்ல

எனக்குள்ள இருக்குள்ள உயிரணுக்களுக்குமேகூட goosebumps ஆகிருக்கும்

எந்தளவுக்கு குதூகலத்துல குதிச்சேன்னு விவரிக்கவே முடியாது

I'm in a trance state.


I think, my feelings for this song manifest ஆகி 

உன்ன எங்கிட்ட universe அனுப்பி வெச்சுதோனு இப்ப தோணுது. 


😘

And at the same time இன்னொரு பயமும்... 


என்னது?


போன தடவ இதே மாதிரி நீ passionateடா பேசினது நிஷாகந்தி பூவப்பத்தி


ம்ஹ்ம்..


அப்பிடி பேசின அடுத்த நாள்லருந்து நீ திடீர்னு காணாம போயிட்ட

எங்க போனன்னே தெரியல

இப்பவும் அதே மாதிரி பேசுறோம்

திரும்ப நீ விட்டுட்டுப்போயிடுவியோனு பயமாருக்கு.


Hahaha. மறுபடியும் அப்பிடி நடக்காது

அடுத்து நீ இல்லாம நா போகமாட்டேன் I swear. 


இவ்ளோ ஒனக்கு அடிமையாக்கிட்டு 

அந்தரத்துல விட்டுடாத is all I ask you for.

இனிமே போனா ஒன்னோடதான் போவேன், 

that’s a promise, கட்டளை, சாசனம், destiny, எல்லாம்.


இது வேறயா

நீ சொன்னப்பறம் அந்த ப்ரிலூட மட்டுமே ஓட விட்டுட்டு இருக்கேன்


Lol.


கல் தோன்றா மண் தோன்றா மொழி தோன்றா காலத்துக்கு முன்னமே குடிகள் தோன்றிடுச்சுன்னா, 

குடிகளுக்கு முன்னமே காமம் தோன்றிடுச்சுன்னு தான பொருள்?

Absolutely. 

ஒரு செல் உயிரியா இருந்தது இன்னைக்கு இவ்ளோ பரந்து விரிந்து இருக்கறதுக்குக் காரணம் காமம் இல்லாம வேற என்ன? எதுக்குத்தான் காமம் இல்ல? 

எதுகிட்டதான் காமம் இல்ல? காமம் is the utmost pleasure humans can endure. அதுக்குமேல போனா நெருப்போட சேந்த நீர்போல, உரு மாறிடுவாங்க. 

மனுசன் என்ன செய்வான்னே சொல்ல முடியாத நிலை எது? பக்தி, போதை, காமம். இதுலாம் உச்சத்துக்குப் போயி அது வெறியா மாறுற மொமண்ட்ல they become unpredictable. 

பக்தியில தன் கண்ணயே தோண்டி சாமி சிலைக்கு வைப்பான், பெத்த புள்ளைய அறுத்து பலிகுடுக்கத் துணிவான். போதைல சொல்லவே வேணாம். சாக்கடைல கூட பிரக்ஞையில்லாம விழுந்து கெடப்பான்.


காமம்! The combo of both பக்தி & போதை. சாதாரணமா தன் partnerரோட underwearரக்கூட தொடக்கூசுற சில OCD பெண்கள், காமம் நாளத்துல ஏறின அந்த நேரத்துல அவனோட அந்தரங்க உறுப்ப சுவைக்ககூட கொஞ்சமும் hesitate பண்ண மாட்டாங்க. மதிமயக்கும். அறிவுப்புலன் அத்தனையவும் மழுங்கடிக்கும்.


Did you notice the irony? 

சுத்தமான பொருட்கள மட்டுமே உள்வாங்கற ஒரு உறுப்பு, கழிவுகள மட்டுமே வெளியிடுற உறுப்ப உறிஞ்ச, விழுங்க, உண்ணத்துடிக்கிறதே இயற்கையின் ஒரு வினோத முரண் தான்ல?


Alcohol தர போதை external influences ஒருத்தரோட ரத்தத்துல கலந்ததால அவங்கள weirdடா behave பண்ண வெக்குது. But lust? 

காமம் ஒருத்தர worshipபும் பண்ண வெக்கும். அடிமையாவும் ஆக்கும். ஏன், கொலையே கூட செய்ய வெக்கும். 


சிலர கவனிச்சிருக்கியா? அவங்களுக்குள்ள சாதாரணமான உறவாதான் இருக்கும். ஆனா once "அது நிகழ்ந்ததும்" அவங்களுக்குள்ள அதுவரைக்கும் இல்லாத ஒரு எமோஷனல் அட்டாச்மண்ட் உண்டாகிடும். அதுக்கப்பறம் அந்த உறவுல ஒருத்தர் எவ்ளோ கொடும பண்ணாலும் அத்தனை அவதியவும் அனுபவிச்சிட்டு திரும்பத் திரும்ப அவங்ககிட்டயேதான் போக வெக்கும். இதுக்கு மேற்பூச்சுக்கு எத்தனையோ காரணம் சொன்னாலும் அடிநாதத்துல பாத்தா அது அந்த காமத்தால உண்டான emotional bondingகா இருக்கும். 


அந்தக்கால விவாகரத்து பஞ்சாயத்துகள்ல ஒருத்தரால இன்னொருத்தர விட்டு வெலக முடியலன்னா பெருசுங்க கேக்கறதுண்டு, விலக முடியாதவங்க ஒடம்பால ஒனக்கு திருப்தி குடுத்துருக்காங்களான்னு. அதே மாதிரி ஒருத்தர் வெலகனும்னு சொல்றப்பவும் ஒடம்பு திருப்தி இல்லியான்னு கேப்பாங்க. இது அவங்கள கேலி பண்ணவோ ஜட்ஜ் பண்ணவோ இல்ல, Lust is an invisible chain that locks two souls. 


காமத்துல பல நிலை இருக்கு. பாத்து, நெருங்கி, தொட்டு, தடவி, போகிக்கறது ஒரு நிலைன்னா வெறும் நினைப்புலையே உச்சம் அடையுறது மற்றொண்ணு. அவங்க நெனப்பே நமக்கு சுகத்தையும் வலியவும் தரும். மகா உன்னத பித்து நிலை அது. காமம் உண்டாக எதையும் பாக்கணும் நுகரணும்னு கூட இல்ல. வெறும் நினைப்பே கூடப் போதும்.


I'm getting high just by thinking all these.


:)



Orgasm is a reflex of the autonomic nervous system. 


வித்தியாச விதங்கள்ல செய்யப்படுற தூண்டல்தொடுகைதடவல்வருடல்திருகல் இது எல்லாமே 

நரம்புகள் மூலமா ஒடம்புல ரசவாதத்த நிகழ்த்துது.


 

Nerves play the major role in orgasm. இந்தப்பாட்டுல majorityயா யூஸ் பண்ணப்பட்ட இசைக்கருவிகள் விதவிதமான string instrumentsதான். அதோட ஆட்சிதான் பாட்டு முழுக்க. 


ஒரு இசைக் கருவிய எங்க தட்டினாலும் தீண்டுனாலும் ஒலி வரும். ஆனா அது இசையாகுமா?குறிப்பிட்ட paceல, அந்த கருவியோட நடக்கற ஒரு தொடர் தொடுகைல தான் அது இசையாகுது. 


அந்த perect sync முமண்ட் தான் ஆர்கசம்.


இசை மீட்டுறவர்ட்ட இருந்து வருதா இல்ல மீட்டப்படுற கருவிலருந்து வருதா? 


அது அந்தக் கருவி அணுகப்படும் முறையில இருந்து வருது.



இந்தப்பாட்ட ஒவ்வொரு தடவையும் ஒரு குறிப்பிட்ட விசயத்த மட்டும் ஃபோகஸ் பண்ணி கேளு. அப்பதான் அந்த பாட்டுல நிகழ்த்தப்பட்டுருக்க மேஜிக் புரியும். Even when you are focusing, there is a high chance that you get carried away with the magic of the song. Stay alert and be focused. 




And next, ஒருத்தர ஃபிசிக்கலா தீண்டாம அவங்க உடல வருடனும்னா என்ன பண்ணனும்? 


ஊதனும். 


ஊதல்னதும் இருமல் வந்த மாதிரி லொக்குலொக்குன்னு இல்ல, 

மெல்லமா, தீக்காயம் பட்ட எடத்த ஒத்தடத்துக்கு ஊதுறாப்ல ஊதனும். 

அந்த ஊதல் stimulate பண்ணும். 


உடலுள்ளத்தின் அடி ஆழத்துல படிஞ்சு கெடக்கற காமத்த ஒரு ஊதல் கிளப்பி விடும். 


இந்த பாட்டுல  யூஸ் பண்ணிருக்க fluteட கவனி. Out of all the flutes, notice why these specific flutes were chosen? It sounds so random and coincidence right? 


Enchanting



கவனிச்சன்னா except for a few highs மொத்தப் பாட்டும், பாடுறவங்களோட குரலும் husky toneலயே தான் இருக்கும். இசைக் கருவிகளும் சரி, பாடகர்களின் குரலும் சரி, வேற யாருக்கும் கேட்டுடக் கூடாதுன்னு ரகசியமா செய்யப்படுற கலவியப் போலவே இருக்கும். 


பாட்டுல பொதுவா குரல்கள் எப்பிடி ஆரமிக்கும்? ஆணோ பெண்ணோ பாட ஆரமிப்பாங்க, அவங்க முடிச்சதும் இன்னொருத்தவங்க பாடுவாங்க. இல்லன்னா ரெண்டு பேரும் ஒன்னா சேந்து ஆரமிச்சுப் பாடுவாங்க. 


இந்தப் பாட்டுல voices கொஞ்சம் வினோதமா, வெளிய obviousசா தெரியாத ஒரு structureல ஆரம்பிக்கும். காமத்தைப்போலவே. 


காமத்துல என்ன நடக்கும்? 


ஆண் தொடங்குவான். பின் பெண் உடன் சேர்வாள். பின் இருவரும் ஒத்திசைந்து முயங்க ஆரமிச்சதும் ஆணுக்கு முதல்ல முடிஞ்சுடும். அவன் முடிச்ச பின்னும் பெண்ணுக்குத் தொடரும்.


இப்ப பல்லவி எப்படி அமஞ்சுருக்குன்னு கவனி. 


குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி… 

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி… 

கடல் அலை தீப்பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை, 

ஊர்களில் தீப்பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை… 


இதெல்லாம் காமத்தில் ஆண் துவங்கற தூண்டல் and foreplay. ஆண் தான் பாடியிருப்பான்.


ஆணுக்கு காமம் bulbல வர்ற ஒளி மாதிரி. சுவிட்ச் போட்டதும் எரியும். ஆஃப் பண்ணதும் உடனே அணையும். பெண்ணுக்கு அந்த பல்ப்ல உண்டாகுற சூடு மாதிரி. சுவிட்ச் போட்டதும் உடனே சூடாகாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் சூடேறும். சுவிட்ச் அணைச்சப்புறமும் சூடு உடனே போகாது கொஞ்சங்கொஞ்சமாத்தான் இறங்கும்.



இப்ப ரிப்பீட் ஆகற அடுத்த வரிகள கவனி.


குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி… 

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி…


இதுல மறுபடியும் குளிருதுன்னு ஆண் ஆரமிச்சதும் பெண் சேர்வா. பெண் சேர்ந்து இசைந்ததும் ஆண் கொஞ்ச நேரத்துல அடங்கிருவான். அதுக்கப்பறமும் காதல் உறவாடித் தொடரும் பெண், மோட்ச வழிய தனியா தேடிட்டு இருப்பா.


That's all கலவியோட one liner.

🤯



கலவியின்போது ஆண் கொஞ்சம் பெண்ணாகிறான், வலுவுமிழக்கிறான். 

பெண் கொஞ்சம் ஆணாகிறாள்,  வலிவும் காட்டுவாள். 

ஒரு கட்டத்துல இருவரும் பால் துறந்து, தகிக்கும் ஒற்றை உடலாகுவாங்க.


ஹஸ்கி டோன்லயே போற பாட்டுல முதல் முறையா ஒரு high pitch வரும். அத கம்பீரமா பெண் பாடுவா.

அதே உச்சஸ்தாயிக்கு பதில் சொல்ற ஆண் பாடுறப்ப குரல கொஞ்சம் கம்மி பண்ணி ஹஸ்கியா கொஞ்சறாப்ல சிணுங்கியும் பாடுவான். 


And you know what the lines are?


தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்



😊

And it is a coincidenceல?

Smart chap. 



காமம் is all about நரம்புகளின் தூண்டல் right?  மத்த எந்தப்பாட்டுலையும் இல்லாதளவு சந்தூர், சாரங்கி, வயலின்னு almost இருக்குற எல்லா string instrumentsசையும் இதுல AR ரஹ்மான் யூஸ் பண்ணிருப்பாரு. 


இந்தப்பாட்டுல இல்லாத நரம்புக் கருவியே இல்லன்ற அளவு. Almost all string instruments are used except veenai. யட்சிகளுக்கான பாட்டுல ஏன் வீணை மட்டும் இருக்கறதே இல்ல? அது ஏன்னு அப்பறமா யோசி. Yet again, a sheer coincidence. 


Have you seen how they generally play Iranian Santoor that is used in this song?


Using wooden hammers, they touch and strike the strings to make it produce sound. அங்கங்க அங்கங்கள தட்டித்தூண்டி ஒலியெழுப்ப வெக்கிறது. 


காமத்துல திளைக்க ஆரமிச்சதும், தொட வேண்டிய இடங்கள எப்ப தொட்டாலும் முனகும் பெண் மாதிரி அந்த mischevious instrument.


And this சாரங்கி, இதோட remarkable quality மனிதக்குரல இதால imitate பண்ண முடியும். அழுகையோ சிணுங்கலோ கொஞ்சிக்கறதோ கெஞ்சறதோ, அத இந்தக் கருவியால துல்லியமா வெளிப்படுத்த முடியும். 


சீண்டி சீண்டி தூண்டிட்டே இருக்க ஆண் கிட்ட, உள்ளூர இன்னும் வேணும் வேணும்னு நெனச்சாலும் வெளிய போதும் வேணாம் வேணாம் என்ன விடமாட்டியான்னு செல்லமா கெஞ்சுற பெண்ணோட அந்த வெட்கக்குரல இந்தப்பாட்டுல வெளிப்படுத்திருக்கும். 


அத்தனை சுகம் குடுக்குற காமம், அதோட சேத்து சோகத்தையும் வலியவும் தருது. இந்தச் சுகம் இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்குமோ, எப்ப வேணாலும் முடிஞ்சிடுமோ, இனிமே இந்த சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிடைக்குமோ கிடைக்காதோன்னு ஏக்கம் கலந்த சோகமும் அப்பிக்கும். வெயில்ல உருகும்போதே நீராவியாகுற ஐஸ்கட்டி மாதிரி. பல உணர்வுகளின் கலவை அது. 



சந்தூர longing, yearning, sadness and melancholyய வெளிப்படுத்த யூஸ் பண்ணுவாங்க. இந்த Emotional nuancesச கேட்கறவங்களுக்கு ரொம்ப ஆழமா கடத்தும் சந்தூர்.


காமம் எப்பிடி பக்திபோதைசோகம்ஏக்கம் கலந்த உணர்வோஅதே மாதிரி சாரங்கியும் Devotion, Romance, longing, joy, celebration, pathos and despairர்னு அத்தனை முரண்படும் உணர்வையும் வெளிப்படுத்தற கருவி. It’s a highly expressive instrument. It is associated with expressing deep emotions and melancholic moods. நீரும் நெருப்பும் மாதிரி Folk & Classical ரெண்டுலையும் இசைக்கும் கருவி இது. 



எல்லாமே கலந்த கலவையா அந்த (முதல்) காமத்த ஒலிக்க what else could be a better choice?


பல்வேறு உணர்வெழுச்சிகளாலான  implosive explosion காமம். உள்ளுக்குள்ளயே குமையும். 



The Ragam! 


Sindhu Bhairavi. Again coincidences with a pattern. 


காமம் is a blending of இரண்டு உயிர், உடல். 


அவைகளின் ஒத்திசைந்த இயக்கம், உணர்வு. 


அதச் சொல்ல எடுத்துக்கிட்ட ராகம் சிந்து பைரவி. 


இது both carnatic & hindustani raga. 


சிந்துபைரவியே ஒரு வினோத ராகம். விரகம், சோகம், கருணை, பக்தி இப்பிடி ஒன்னுக்கொன்னு extreme endsல இருக்க உணர்வ வெளிப்படுத்தும். இந்த ராகத்தோட haunting குணம் கேக்கறவங்க ஏக்கத்த தூண்டும்.



நம்ம ஊர்ல மட்டுமில்ல, middle eastட்ட கடந்து வீசுற ராகமிது.


இஸ்லாம்ல இசை தடுக்கப்பட்டது. அவங்க பள்ளியில ஒரு நாளைக்கு அஞ்சு தடவ பாங்கு சொல்றாங்கல்ல, அது சிந்து பைரவி ராகத்துல அமஞ்சதுதான் 


😂😂😂


இது அவங்க தெரிஞ்சு பண்ணாங்களா இல்ல இதுவும் தற்செயலான்னும் நீயே யோசிச்சுக்கோ. 



 

and finally, யட்சிகளுக்கான பாட்டுல பூவப்பத்தி இல்லாலமா?


மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்


ஆயிரம் ரெண்டாயிரம் பூ இல்ல. லட்சம் பூ. Imagine the visuals of it. Also அது ஏன் யாரும் எதுவும் சொல்லாம லட்சம் பூ மலரணும்? காம உறவுல ஈடுபட்டிருக்கவங்க வாயால பேசாம அது ஏன் அந்த இருமனமும் பேசணும்? நெஞ்சுக்குள்ள லச்சம் பூ மலர்றது எத குறிக்குது? அந்த பூக்களின் வாசம் வீசுறது எத சொல்லுது? 'மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும் நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்'னு இந்த பூமில உள்ள மனுஷங்களால ஒருநாளும் பாடமுடியாது. அப்படியே பாடினாலும் அது... 

சிவராமன் இடைமறித்தான். 

FUCK FUCK FUCK FUCK. 
WAITTTTT.

I FUCKING HAD THIS CONVO BEFORE. 

I FUCKING FUCKING HAD THIS CONVO. 

IM UTTERLY CONFIDENT THAT I'VE BEEN IN THIS CONVO BEFORE. 

இதே மாதிரி ஒரு கான்வோ.

வேற எதோ ஒரு பாட்டுக்கு.

என் லைஃப்ல ஏற்கனவே நடந்துருக்கு. 

It all feels like a Déjà vu again. 


படபடவென்று ரிப்லை செய்தான் சிவராமன். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது. பாடல் லூப்பில் இன்னும் ஒலித்தபடியே இருந்தது 

இதற்கு முன் இதேபோல் எங்கோ எப்போதோ பேசியது கானல் நீர் போல நினைவில் சலனமிட்டது. ஆனால் கவனமாகச் சிந்தித்தால் ஞாபகத்திலிருந்து மறைந்து போக்குக் காட்டியது. அதிலிருந்து கவனத்தைத் திருப்பினால் மீண்டும் சலனம். 

I'm sorry, I'm totally mind fucked. தல வலிக்க ஆரமிச்சிட்டிது. 

எப்பவோ சின்ன வயசுல நடந்த மாதிரி இருக்கு. 

ஆனா அந்த மாதிரி எதுவும் என் லைஃப்ல நடந்த ஞாபகமும் இல்ல. 

அப்ப அது முன் ஜென்மம் மாதிரி எதுலையாச்சும் இருக்கும்

Or in some parallel universe. 

ரொம்ப strain பண்ணாத.

Freeயா விடு.  

ஒரு பத்து நிமிஷம். I'll be back.

Take all your time. We still have plenty of night left. 


அந்தப்பாடலை மீண்டும் மீண்டும் ஓட்டிக்கேட்டான். அவள் சொன்ன ஒவ்வொரு வரியையும், குறிப்பிட்ட ஒவ்வொரு nuanceசையும் ஒப்புமை செய்து கேட்டான். தற்செயல் போலத் தோன்றினாலும் அவள் சொன்ன அனைத்தும் சரியாகப் பொருந்தியது.

எப்படி இத்தனைக் கச்சிதமாக யட்சிகளின் சூட்சும உலகங்களைப் பற்றியும் அங்கிருக்கும் கொண்டாட்டங்கள் பற்றியும் இவள் அறிந்திருக்கிறாள் என்பதும் அவனுக்கு யோசனையை உண்டாக்கியது. 


Hey, I need some time to process.

No worries.

But before we wind up I have one thing to ask you.

ம்ம் கேளு.

குளிருது குளிருத one of your two favoritesனு சொன்னியே

which is the other song?


அது சர்ப்ரைஸ். That one is so very special. 


We’ll celebrate by listening to it together when we meet.


🤩🤩🤩 அப்போ நாம மீட் பண்ணப்போறமா?


சீக்கிரமே.


Woooohooooooo!!!

🥳🎉🥳🎉🥳🎉🥳🎉


💃🕺

Comments

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂