▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫

🌑

எப்போதெல்லாம் அவள் நினைவு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான். ஒவ்வொரு ஆப்பையும் திறந்து மூடித் திறந்து மூடித் திறந்து எந்த நொடியிலும் அவள் ஆன்லைன் எனக் காட்டிடாதா, அவன் அனுப்பிய மெசேஜுகள் ஊதா tickகுகளுக்கு மாறாதா என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கிக்கொண்டிருந்தான். Depression, frustration, mid-life, existential crisisகள் என இதுதான் என வரையறுக்க முடியாத கலவையான உணர்வுக் கொந்தளிப்பில் இருந்தான். இரவுகளில் புதிய வகையான 'வஸ்துக்கள்'. முகத்தின் உணர்ச்சிகள் அனைத்தும் அயர்ன் செய்யப்பட்டதுபோல எந்த உணர்வுமற்று அவனனுப்பிய கரைசேரா மெசேஜுகளையும் மீம்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். பார்ப்பதற்கு இறந்த பிணமொன்று கடைசியாய்த் தன் டைரியைப் படிப்பதுபோல இருந்தது. 


In lips' soft meeting, passions ignite,

Cuddle's warmth, love's tender respite.

Embrace entwined, souls find their bliss,

Kiss and cuddle, love's eternal kiss.


me: :(

you: *typing...*

me: :)



ஆனால் என்னை விட்டு போனால்

எந்தன் நிலா சோர்ந்து போகும்

வானின் நீலம் தேய்ந்து போகுமே

முன் கோபக் குயிலே

பித்து பித்து கொண்டு

தவித்தேன் தவித்தேன்

உன்னை எண்ணி நான் வாடிப் போவேன்

நீ இல்லாமல் கவிதையும் இசையும்

சுவையே தராதே

"Everyone in your life will have a last day with you and 

you don't even know when it will be"

நீ என்னைக் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் கொஞ்ஞ்ஞ்ஞ்சினால் நிலாவை வாங்குவேன்

We are strangers again, is this how it all ends?

 ப்லூ டிக் கூட வர மாட்டுது. மெசேஜ் பாத்தியா இல்லியான்னு கூட தெரியல.

Did I get “message not seen” zoned?

எங்கடி போன?

FUCKING MISS YOU IDIOT.

I was ready to share the moon with you, 

but you chose to leave when the sun rose.

இப்ப ஒரு நிமிசத்துல ரிப்லை பண்ணு. 

உன் பேர காப்பி பேஸ்ட் பண்ணாம லச்சம் தடவ எழுதி அனுப்பறேன்.

Is everything all right? ஒடம்புக்கு எதும் ப்ரச்சனையா? செத்துகித்து தொலையாத.

7 billion people (& counting) and you still my favorite person


#selfnote

"People inspire you, or they drain you. Pick them wisely. - Anon"




முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.







̶I̶ ̶f̶u̶c̶k̶i̶n̶g̶ ̶h̶a̶t̶e̶ ̶y̶o̶u̶ ̶s̶o̶ ̶m̶u̶c̶h̶ ̶I̶ ̶w̶i̶s̶h̶ ̶y̶o̶u̶ ̶w̶o̶u̶l̶d̶ ̶d̶i̶e̶ ̶
b̶u̶t̶ ̶I̶ ̶a̶l̶s̶o̶ ̶miss you and I need you nowwwww  

Your earlobes are thick and chewy like barnacle meat


Never force a connection. Let people do what they want,
so you can see what they'd rather do. Choose what chooses you.




ஸ்க்ரீன்சேவரில் நிறங்கள் நொடிக்கு நொடி மாறுவதுபோல உள்ளத்தின் உணர்வுகள் ஒவ்வொரு நிமிடமும் வெவ்வேறு நிறமெடுத்தன. அப்போது என்ன உணர்வுக் கொதிப்பு உள்ளதோ அதை மெசேஜாகவோ மீமாகவோ அனுப்பினான். எல்லா உணர்வுகளையும்விட அதிகம் மேலோங்கி இருந்தது கையாலாகாதனமே. ஒரு closure கிடைக்காமல் அவதிப்பட்டான்.


ஏன்னு சொல்லிட்டாச்சும் போயிருக்கலாம்லடி மைரே.


And now I do not know who I was when I wasn't with you.



இருந்த கோபத்தில் ஒரு மீமை அனுப்பினான். 


அனுப்பிவிட்டு, பிறகு என்ன நினைத்தானோ, அனுப்பியதை டெலிட் செய்து விட்டு மீமைக் க்ராப் செய்து மீண்டும் அனுப்பினான்.



அந்த வெப்சைட் அட்ரசும்  அந்த quoteடைச் சொன்னவர் பெயரும் அதிலிருப்பது ஏதோ ஒரு அசந்தர்ப்பமாக  அவனுக்குத் தோன்றியது. அவையிருப்பது ஒரு வகையில் அவனை, அவன் உணர்வை ஏளனம் செய்வது போலவும் தோன்றியது. 


அதிலிருந்து அவன் எடுக்கும் மீம்களை சர்வ ஜாக்கிரதையாக இப்படி அவனை offend செய்யும் விசயங்கள் எதுவுமில்லாமல் பார்த்துக்கொண்டான். 


அத்தனை களேப்ரங்களிலும் இத்தகைய attention to detailலைச் செய்ய முற்படுவது அவனுக்கே அவன் மேல் சிரிப்பு வந்தது. 

'ஒன்ன மாதிரி ஒரு லூசுக்கூ ஒலகத்துல இருக்க மாட்டான். சாவுடா' என தனக்குத்தானே soliloquyக்கொண்டான். 

சட்டென ஏதோ தோன்ற, வரிசையாக 

1

2

3

4

5

6

7

8

9

என எண்களை அனுப்பினான். பிறகு அவை ஒவ்வொன்றையும் டிலிட் செய்தான். 


மெசேஜ் இருக்கறதவிட அது டிலிட் ஆகிருந்தாத்தான என்ன அனுப்பிருப்பேன்னு க்யூரியாசிட்டி வரும்... அதுலியே சாவு என அடுத்து a b c d அனுப்பி அவற்றை டிலிட் செய்யத்துவங்கினான். 


•  🔄  •  🔁  •  🔂  •  🔃  •  🔀   ♻️ 

From Slavic folklore, Baba Yaga is a witch-like character who often appears as an old, haggard woman who lives in a hut that stands on chicken legs. She is a mysterious and powerful figure, sometimes helping those who show kindness and wisdom, and other times causing mischief and harm.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂