•~ ஷி ~•

🌕


நடுவுக்குச் சற்று தள்ளிய நிசி.

 

பேரொளி ஒளிரும் முகமொன்று சிவராமனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அப்பார்வையின் கனம், முந்தின மாலை அவன் எடுத்துக்கொண்ட திட-திரவ-புகைப்போதை வஸ்துகள் தந்த ஆழ்ந்த உறக்கத்தைத் துளைத்து அவனை உறுத்தியது. ஒளிச் சாட்டையால் யாரோ தம்மை அடிப்பதுபோலுணர்ந்து திடுக்கிட்டெழுந்தான்

அறை முழுவதும் நிலவொளி. அவன் அறையிலிருந்து எதோ அரை கிலோமீட்டர் தூரத்தில் உதித்ததுபோல் தெரிந்த அன்றிரவின் பால்கனி நிலா, அவன் வசித்த எழுபத்தெட்டாவது மாடியின் பால்கனிக்கும் அறைக்கும் இடைப்பட்ட ஆளுயரக் கண்ணாடிக் கதவுகள் வழியே ஊடுருவியிருந்ததுஅறையின் வெள்ளை நிறச் சுவர்ப்பூச்சு, மகாப் பௌர்ணமி உமிழ்ந்த பேரொளியை உட்பெருக்கி எதிரொளித்து, அவ்வறை முழுதும் தண்-வெண்மையில் தகித்துக்கொண்டிருந்தது. அந்நிசியின் பேரமைதியை இப்பேரொளியின் இரைச்சல் மட்டுமே நிரப்பியிருந்தது


அந்நிலவை பால்கனிக் கண்ணாடிக் கதவின் வழியே ஆச்சரியத்தோடு பார்த்தான் சிவராமன். நிலவின் தகிக்கும் ஒளி அவனுக்குள் ஒரு விநோத அச்சத்தை முளை விடச்செய்ததுமுகமெல்லாம் நிலவாக வெண் வட்ட முகமொன்று இவனைப் பார்த்து மர்மச் சிரிப்பொன்றை ஒளிர்ந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது

ஆல்ஃபா, பீட்டா, காமாத் தூக்கத்திலிருக்கிறோமா அல்லது விழிப்பிலா எனக் குழம்பினான்என்ன இவ்வளோ வெளிச்சம்? இன்னைக்கு எதும் சூப்பர் மூனாஎன நினைத்துக் கொண்டிருந்தபோதே மொபைல் சீட்டியடித்தது. நட்ராத்திரி மூனுக்கு நோட்டிபிகேசனா என அவன் உருண்டுகொண்டிருந்த கிங்சைஸ் மெத்தையைக் கையால் துழாவி மொபைலைத் தேடினான்.





Bumble Match நோட்டிபிகேசனைக் கண்டதும் (போதைத்) தூக்கம் சட்டெனக் கலைந்து, Nervous சிஸ்டத்தில் ஓர் அவசர கதி டோபமைன். 
அயலகத்திலே ஒரு இந்திய முகம். குறிப்பாய்ச் சொன்னால், திருத்தமான, ஈர்ப்புவிசை பொருந்திய தென்னிந்திய முகம் match செய்திருக்கிறது. அவள் பெயர்தான் சற்று வினோதமாகப் பட்டது. 
மேட்ச் செய்ததும் உடனே அவளிடமிருந்து மெசேஜ் வருமென எதிர்பார்த்தான். அந்த App-ல் பெண்களாக விரும்பி முதல் மெசேஜ் அனுப்பும் வரை ஆண்களால் தொடர்பு கொள்ளவே முடியாதாதலால் அத்தனை அட்ரினல் அல்லல்களுக்கும் மத்தியில் அவளின் மெசேஜுக்காகக் காத்திருந்தான். போதையின் அலுப்பில் உறங்கியும் போனான்.

அவளின் மெசேஜ் வந்திருக்கிறதா என முதல் வேலையாக மொபைலைப் பார்த்தபின்னே காலை விழித்தான். 0 messages.
அன்று முழுவதும், நடக்கையில், உண்ணையில், வேலைக்கிடையில், Netflixசையில், Power napபிற்காக மல்லாந்து கிடக்கையில் இப்படி அத்தனைக் கிடையிலும் மொபைலை எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாகச் சொன்னால் மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு இடையில் தான் அத்தனை வேலைகளையும் செய்தான். 
அவள் மெசேஜ் அனுப்ப இன்னும் எத்தனை நாழிகள் உள்ளன என்பதை App மணற் கடிகாரத்தைக் கொண்டு காட்டியது. 24 மணி நேரத்திற்குள் மெசேஜ் வரவில்லையானால் auto unmatch ஆகி விடும். பிறகு தொடர்பு கொள்ளவே இயலாது. நேரம் கரைவது அவனின் ஆயுளே கரைவதாக அவனுக்குப் பட்டது.
அந்தப் பகல் காத்திருத்தலிலேயே கழிந்தது. எதோ mis-match போல, இல்லன்னா ஃபேக் ஐடியாக்கூட இருக்கலாம் எனத் தனக்குத் தானே நினைத்துக்கொண்டு இரவில் எப்படியோ உறங்கிப்போனான்.
யாரோ தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாய் மீண்டும் உணர்ந்து திடுக்கிட்டு விழித்தான். தண்ணீர்ப் போத்தலை நோக்கி வலதுகை செல்ல, இடது கை மொபைலைத் தேடித் துழாவியது. நீர் குடித்துக் கொண்டே மொபைலின் தொப்புள் பொட்டில் கட்டை விரலைப் பதிந்து அதைத் திறந்தான்.
அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அதுவரை இருந்த தூக்கக் கலக்கம் எங்கே சென்றதென்றே தெரியாமல் சர்வமும் விழித்துக்கொண்டது. நோட்டிபிகேசனைத் தட்ட, "Slept already?" எனக்கேட்டு அனுப்பியிருந்தாள். மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தான். அவன் எழுவதற்கு மிகச்சரியாக ஒருசில விநாடிகளுக்கு முன். 

அவளின் கேள்விக்கு பதிலனுப்பினான்.

Yes and No.






ஒரு நிமிடம் பேஸ்தடித்துப் போனான். அவன் நண்பர்கள் சிலர் அவர்களின் நண்பிகளிடத்தில் செக்ஸ்டிங் செய்வதைப் பற்றியெல்லாம் குடியினூடே பேசுவதைக் கேட்டிருக்கிறான். இந்த முதல் first hand experienceசில் அத்தனைக் குளிரிலும் உள்ளங்கையில் திடீர் வெப்பம் பரவியது.

அடுத்து மேற்கொண்டு என்ன சொல்வது என குழம்பிப்போய் இருக்கையில்,


"What, are you confused about what to reply?"

        😱😱😱 

"Epdinga? enakkennamo neenga mind reader-onu padudhu"


LOL. May be :)

        Neenga oru vela fake id-yonnum...

LOL.                

            
  Unga profile la location distance kaatudhu.
You are just an hour's drive away dhan.
And indha pournami nadu rathiri la fake id
vechu enna kalaaikara alavukku yaarum vettiya
iruka matanganu nambaren.

Cut to the chase.


 Sorry. Naama topic kullaye poyiruvom.

That's my boy. So, tell me, vera
edulalaam edellaam theriyum?


Adhu neraya irukku. Aana ippo dhan oru message ku munnaala
almost block zone  thottuttu vandhurukkom.
Naan edhachum solli… neenga vechuruveenga enna thalli...


hahaha. I won't. Promise.


Appo sari. Adhaavadhu paathukiteenganna
oruthara endha oor kaarangannu
silapala amaippugala vachu therinjukalaam.
Face, nose, Pottu, dress ipdi yegappattadhu irukku.
Ovvoru state-tukkum oru distinct amaippu irukku.
Adha vechu oralavu guess panniralaam.


Oho! tell me more.


sharp noses irundha avanga andhra,
wheatish color irundha avanga sea shore karnataka,
maida maavu color na punjab. ipdi.



I'm from kerala. Ippo sollu,
enna edha vechu kandupudippa?

   

யாரு சாமி இவ... என்று உரக்கச் சொல்லி ஃபோனைக் கீழே வைத்துவிட்டான். 

"Take the phone dammit" என்று அவளின் மெசேஜ் நோட்டிபிகேசனில் காட்டியது.

yenga, enakku bayama irukku.

Idhellam anubavikkaradha venaamane theriyala.


yaara anubavikka pora?


    Dheivame! Yaarummaa nee?

Yakshi!

Apdinna?


Go find it. Goodnight!


உடனே அவள் ஆஃப்லைன் எனக்காட்டியது.

ச்ச, நல்ல ஃப்லோல போய்ட்டிருந்துச்சு. கெடுத்துட்டமோ? இன்னம் கொஞ்சம் பேசியிருக்கலாமே என மனம் அரித்தது.

Konjam ellaam naalaiku pesikalaam. Go pee. Shake well and sleep tight. Don't let the bed bugs bite.

மீண்டும் ஒரு மெசேஜ். உடன் ஆஃப்லைன்.

உடலிலுள்ள ரத்தம் யாவும் தோலின் வேர்வைச் சுரப்பிகள் வழியே பீய்ச்சி அடித்து விடுமளவுக்கு ரத்த அழுத்தம் அதிகமானது. பாலைவனக் குழியடுப்பில் இட்டது போல் உடம்பில் அனல் தகித்தது. அவனின் தூக்கம் முழுவதுமாய்க் கலைந்தது.


அறையெங்கும் பளீரென்ற வெண்ணிலவொளி.

◇─◇──◇───தொடரும்──◇──◇─◇

Comments

  1. oh ingarunthu vaasikanumaamaa. I just started from the last POSTED one hm. it's interesting.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂