മകളെ...



முதல் மரியாதை பட ஆரம்பத்துல சிவாஜிக்கு இழுத்துக்குட்டே இருக்குமே அத மைண்ட்ல வெச்சுக்கோங்க.
---


பெங்ளூர்ல ஒரு ப்ரெண்டு. மல்லு. உடனே சிலருக்கு கண்ல pupil பெருசாவும். அப்டி எதும் பயலாஜிகல் மாற்றம் இருந்தா இப்பவே ஓடிப்போயி கண்ண கழுவிட்டு வந்துருங்க. ஒரு கவிதை இருக்கு தெரியுமா?

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்
என் கல்யாணம் மட்டும் ஏன்
செட்டிப்பாளையத்தில்
நிச்சயிக்கப்பட்டது?
- கவிஞர் சக்திகனல்

இதே மொமண்ட்தான் அவகூடவும். அவகிட்ட அடிக்கடி நான் கேக்கற ஒரு விசயம். கேரளாவோட ஜக்கு பிகர் கூட தமிழ்நாட்டோட ஜில்லு பிகரவிட அழகாருக்கும். பக்ஷே மோளே, நீ மட்டும் ஏன் இப்புடி இருக்க? வழக்கம்போல, ”போடாத்தெண்டி” என பதில் வரும். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்படம் மாதிரி இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டிய கேரளப்பெங்குட்டியானு. அவ்ளோ அட்டு (அட்டாக் மீ!!!).
 
விப்ரோல என் ஜூனியர். ஜாவாவுல பிரிச்சு மேயுவா. எதாச்சும் புது ரெகொயர்மெண்ட் வந்தா நான் தத்தத்த-ன்னு தடவிட்டு இருப்பேன். அது டெட்லைனுக்கு முந்தியே முடிச்சுட்டு டீம்ல மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கும். அவளுக்கு தமிழ்நாட்டையும், தமிழர்களையும் சுத்தமா புடிக்காது. அதனாலயே எங்கிட்ட ப்ரென்ஸாயிட்டா. எப்டின்னு கேக்காதீங்க. There is nothing wrong in friendship and war. எங்களுத friendshipனு சொல்லமுடியாது. எப்படா ஒருத்தர் மானத்த ஒருத்தர் வாங்கறதுன்னு கண்கொத்தியா வெய்ட் பண்ணிட்டு இருப்போம். தமிழ்நாட்டப்பத்தி, தமிழர்களப்பத்தி பத்தி எதாச்சும் மொக்கத்தனமா நியூஸ் வந்தா அத எடுத்து வெச்சு ஒரு மண்டலத்துக்கு ஓட்டுவா. மூச் விடமாட்டேன். பேசினா நமக்குத்தான் சேதாரம். ஓடுமீன் ஓட, கொக்கா காத்திட்ருப்பேன். கேரளாவப்பத்தி எதாச்சும் நியூஸ் வந்தா (அப்டி எதுவும் அதிகம் வராது. அப்டி ரொம்ப நாளா வரலன்னா ரீரிலீஸ் ஆவுற எதாச்சும் ஷகீலா பட போஸ்டர தோண்டி எடுத்து, அப்டி இல்லன்னா எதாச்சும் கேரளக்கள்ளக்காதல் நியூச எடுத்து இந்தப்பொழப்புக்கு…ன்னு சொல்லி டோட்டல் கேரளாவ ஹுமிலியேட் பண்ணிருவேன்)

பாய்ங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் மாதிரி கேரளாவுக்கு இருக்குற நேஷனல் code word, “Naattil evida?” – ப்ரைவேட் ஆஸ்பத்திரில, ”எவ்ளோ செலவானாலும் பரவால்ல, காப்பாத்துங்க”ன்னு சொல்லிட்டா எப்புடி மளமளன்னு பொணத்துக்கு கூட பெடிக்யூர் மேனிக்யூர் பண்ணி பில்லுப்போடுவாங்களோ அதுமாதிரி ஒரு மல்லுகிட்ட போய் இந்த அண்டா-கா-கசம் மந்திரத்த சொல்லிட்டா போதும், பாசத்தக்கொட்டிருவாங்க. ஆரம்பத்துல இவகிட்ட மல்லுல பேச ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம்தான் புரிஞ்சது மல்லு ரொம்ப ஈசியான மொழின்னு.

முப்பதே நொடியில் மல்லு பேசுவது எப்படி:
ஒரு டால்டா டின்னை எடுத்துக்கொள்ளவும். அல்லது ஏதேனும் ஒரு சிறு தகர டப்பா. வேறு மெட்டீரியல் முழுப்பயன் தராது. முழுக்கற்பூர சைசில் நான்கே நான்கு செங்கற் துண்டுகள். குறிப்பிட்ட அந்த கற்களை டப்பாவுக்குள் போட்டு, காற்றுப்புகாவண்ணம் அடைத்து, உங்களிடம் பேசும் ஒரு மல்லுவிடம் (டப்பாவை) குலுக்கவும். குடுகுடு - குடுகுடுவென அது எழுப்பும் ஒலிக்கு அவர்களும் மறுமொழி கூறுவார்கள். உங்கள் நட்சத்திரம், லக்னத்தைப்பொறுத்து செங்கல் டால்டாவின் அருளால் குடுகுடுவில் ஜோக்குகளும் மாட்டலாம், அதற்கு அவர்கள் Ayyadaa! என்றோ, Ente Dheivamey! எனவோ கூறலாம். (இது ஒரு டெஸ்டட், ப்ரூவ்ட், பேடண்ட்டட் செய்முறை)

துர்சம்பவம் 1: இப்படியான நிலையில், ஒரு நாள் திடுதிப்பென வந்தது அந்த செய்தி. பாபர் மசூதி தீர்ப்பு வழங்கும் தினம். ஆபீசில் அனைவரையும் மதியம் 1 மணிக்கெல்லாம் கிளம்பிவிடச்சொன்னார்கள். எங்கு, எப்போது, என்ன நடக்கும் என்று எதுவும் தெரியவில்லை. பயங்கரக்குழப்பம். பயம். மதியத்துக்கும் இரவுக்கும் சேர்த்து சாப்பாடு (சீஷெல்லில், பிரியாணி எனச்சொல்லி விற்கப்பட்ட தும்பைப்பூ நிறத்திலான சோற்றை) வாங்கிக்கொண்டு நானும் என் flat matesசும் வீட்டுக்கு சென்று விட்டோம். சர்ச்சைக்குரிய இடத்தில், இரு பங்கு இந்துக்களுக்கும் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கும் என்று செய்தி வெளியானது. சற்று நேரத்தில் திடீரென கதவு டமார் டமாரென தட்டப்பட்டது. எங்களுக்கு அல்லு இல்லை. மச்சி, செத்தா எல்லாரும் ஒன்னா சாவோம் வாங்க என்று சொல்லிக் கதவைத்திறந்தால் இந்தக்குரங்கு தன் ப்ரென்சோடு, “பேடிச்சுபோயோ மோனே” என்று கூறி நிற்கிறது. வந்த ஆத்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறித்தெடுக்கப்படவேண்டிய நான்கு நறுக் இங்லிஸ் வார்த்தையைக்கூற, “சூர்யா நியூஸ் வைக்கு move move” என்று எங்களை சட்டை செய்யாது அந்த மலையாளத்திமிங்கலம் டிவியின் பக்கம் கரை ஒதுங்கியது. பின் அவளின் Bagல் வைத்திருந்த சாக்லேட்டை எல்லோருக்கும் பகிர ஆரம்பித்துவிட்டாள். ”நிங்ஙள்க்கு ஸ்தலம் கிட்டில்லா, இந்தா சாக்லேட்டெங்கிலும் ரெண்டு கழிக்கு” என இரண்டு சாக்லேட்டுகளை என்னிடம் தூக்கிப்போட்டாள். வந்த ஆத்திரத்தில் சாக்லேட்டைதூர வீசி இருப்பேன். அது எனக்குப்பிடித்த மஞ்ச் என்பதால், ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அவள் மேலிருந்த கோபத்தை சாக்லேட்டைக்கடித்து தீர்த்துக்கொண்டேன். சாதூர்யத்தைவிட நமக்கு சாக்லேட் முக்கியம். அன்று நான் எப்படி பால் போட்டாலும் பௌண்டரியில் வீசினாள். சரி, ஐ வில் கெட் மை டே என ராஜாவின் திருவாசகத்தோடு ஒதுங்கிக்கொண்டேன்.

துர்சம்பவம் 2: ஒற்றைப்படை மற்றும் ரெட்டைப்படை சனிக்கிழமைகளில் அருகிலிருந்த கேரள ஓட்டலில் நாங்கள் பரோட்டா & பீஃப் சாப்பிடுவது வழக்கம். இவள் பீஃப் சாப்பிட்டது ஆபீசில் சில தோழர்களுக்கு தெரிந்து, மனவருத்தம் ஏற்பட்டதுபோல. கொஞ்சம் பரிவு கலந்த கண்டிப்புடன் இவளிடம் வந்து கேட்டனர் (அடுத்த சீட்டில் பொட்டி தட்டிக்கொண்டு அடியேன்).

”நீ பீஃப் சாப்டுறியாமே?”

”ஆமா.”

”நாம அதெல்லாம் சாப்புடக்கூடாது. அது சாமி.”

”சின்ன வயசுலருந்து சாப்புடுறேன். எங்க வீட்ல எதுவும் சொன்னதில்லயே.”

”சிக்கன் மட்டன் சாப்ட்டுக்கோ, பீஃப் சாப்பிடக்கூடாது.”

”எனக்கு சிக்கன் மட்டன் பீஃப் எல்லாம் ஒன்னுதான்.”

”அதெல்லாம் தப்பு. இனிமே சாப்டாத.”

”சரி, நானா சாப்பிட மாட்டேன். ஆனா யாராச்சும் வாங்கித்தந்தா சாப்புடுவேன்.”

”வேற யாரு வாங்கித்தரான்னு சொல்லு அவன நாங்க பாத்துக்கறோம்.”


அவர்கள் இப்படிச்சொன்னதும், இவள் ஓரக்கண்ணால் என்னை நக்கலாக நோக்கி, “எந்தா மோனே, அவரிடத்து பறையட்டா?” என்பதுபோல் பார்க்க, எனக்கு அச்சத்தில் அத்தனை துவாரங்களிலும் அலாரம் அடித்தது. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தையும் அடக்கிப் பம்மிவிட்டேன். அவர்களை எப்படியோ பேசி சமாளித்து அனுப்பிவிட்டாள். பின், அன்று, அவ்வாரம், அம்மாதம், அம்மாமாங்கம் முழுவதும் அவளுக்கு தோணுகிறபோதெல்லாம் அவங்கட்ட மாட்டி உடவா? என ப்லாக்மெய்லி மானபங்கப்படுத்தினாள்.

துச3: ஐடி வாழ்க்கை வெறுத்துப்போன ஒவ்வொரு ஜீவாத்மாவும் செய்யும் முதல் வேலை, பேங்க் ஜாப்களுக்கு அப்ளை செய்வது. ஜாவாவோடு மல்லுக்கட்ட முடியாததால் நானும் ஐடியை டைவேசி பேங்கோடு லிவிங் டுகதர் ஆகிவிடலாமென திட்டம் போட்டு எக்சாமுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். பேய்க்குபயந்து கோயிலுக்கு போனா அங்க ரெண்டு பிசாசு டண்டணக்கா, ஏ டணக்குணக்கான்னு ஆடுச்சாம்.. அப்டி ஆகிப்போச்சு அந்தக்கத.

உபகதை: சின்ன வயசுல நான் பொறந்தப்ப (எல்லாரும் சின்ன வயசுலதான பொறப்பாங்க..ஙே), மெடிக்கல் டெஸ்ட் எடுத்தாங்க. ப்லட் குரூப் A1+ve, எடை – 2.30, நிறம் – பியூர் ப்லாக், இதோட சேர்த்து, Allergic toங்குற எடத்துக்கு நேரா Mathsசுன்னு எழுதிருந்துச்சாம். அழகையும் (ப்ப்ப்ர்ர்ர்), அறிவையும் (ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்) எனக்குக் கொடுத்த ஆண்டவன், எங்கிட்டருந்து அரித்மெடிக்க பறிச்சுக்கிட்டான். இவ்வாறாக Mathematically Challengedஆகப்படைக்கப்பட்ட நான், அதை மறந்து பேங்க் எக்சாம் ப்ரிப்பேர் செய்யும்போது கணக்கு is not my cup of கட்டஞ்சாயா என மீண்டும் hence proved ஆனது.

ஒரு மெண்ட்டல் சப்போட்டுக்காக இவளையும் எக்சாம் எழுதச்சொன்னேன். கணக்குல புலின்னு ஒன்னு சொல்லுவோமே அநேகமா அது ஐய்யப்பன் ஒக்காந்துருந்த புலிதான் போல. அந்தூரு தண்ணியக்குடிச்சதாலோ என்னவோ, ஆப்டிட்யூட் கொஸ்டின பாத்ததும் ஆன்சர் சாய்ஸ் கூட கேக்காம சட்டு சட்டுன்னு இவ பதில் சொன்னா. பதில் கண்டுபிடிக்க எத்தனையோ குள்ளவெட்டு டெக்கினிக்கி கத்துக்குடுத்தா. அது ஒரு மண்ணும் மண்டைல ஏறலங்குற ஞானமே எனக்கு பரிச்ச ஹால்லதான் வந்துச்சு. ஒரு மண்டலம் கழிச்சு ரிசல்ட்டும் வந்துச்சு. வி.சேகர் படம் மாதிரி easily guessable climax தான். அவ பாசாய்ட்டா. என் நம்பர் விடுபட்ட எண்கள்ளயோ அல்லது data errorனாலயோ கூட வரல. இந்த பேங்க் எக்சாம்ல துப்பு வாங்கின மேட்டர ஆபீஸ் புல்லா பரப்பி விட்டுட்டா. என்ன காரணத்துக்கோ ”நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட”ன்னு சொல்லிட்ருந்த ஆபீஸ் ஆளுங்க, அப்ப ”நீ எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டியா?”ன்னு கலாய்க்க ஆரமிச்சானுங்க. அதுவர அடிமையா இருந்த என்ன, கொத்தடிமையா ஆக்கி குத்து குத்துன்னு குத்தினானுங்க.

முன்கதை: இவ ஏன் இப்புடி கேப் கெடச்சப்பலாம் என்ன ரேப் பண்றான்னா (don’t take it literally), ஒரு நாள் அவளோட செலிப்ரிட்டி ப்ரெண்டு ஒருத்தன் இவளுக்கு போன் பண்ணி பேசினானாம். அத ஆர்வத்தோட பெரும பொங்க எங்கிட்ட வந்து சொன்னா. நா அவன யாருன்னு கேட்டுட்டேனாம். அன்னைக்கி ஆரமிச்சுது இவளோட க்ரட்ஜ். எனக்கு சத்தியமா அது யார்னு தெரியாது. அவன் யார்னு கேட்டதுக்கு கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்துன்னு சொன்னா. Who is he?

இதுபோல எங்களுக்குள் தீர்க்காத கணக்கு ஆறாத வடுவாய்ப் பல உண்டு. சரி, இவளிடம் மொக்கை வாங்குவதுதான் நம் விதிப்படி எழுதப்பட்டதுபோல என நினைத்துக்கொண்டேன்.

ஓரிரவு. மணி 3.30 இருக்கும். மொபைல் அடித்தது. எடுத்துப்பார்த்தால் இவள்.

”என்னடி இந்த நேரத்துல?”

”எங்க பாட்டி ரொம்ப சீரியசா இருக்காங்க.”

”ஓ. Im sorry. இப்ப நா என்ன பண்ணனும்?”

”அவசரமா நா ஊருக்கு போகணும். பேங்ளூர் – கொச்சினுக்கு ஒரு ஃப்லைட் டிக்கெட் போட்டுத்தா. ஆஸ்டல்ல எல்லாரும் தூங்கறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.”

”சரி. டென்சனாவாத. போடறேன்.” அன்றைய காலை ப்ளைட்டில் டிக்கெட் போட்டு அவளுக்கு மெய்ல் செய்துவிட்டு தூங்கப்போனேன்.

நன்றி நவின்றாள். 
இரண்டுமணி நேரம் கழித்து மீண்டும் அவளிடமிருந்து போன்.

”மோனே, டிக்கட் இட்டது வேஸ்ட்டாயி”.

”ஏண்டி? என்னாச்சு?”

”நா ஊருக்கு போக முடியாது.”

”ஏன்? பாட்டி எறந்துட்டாங்களா?”

”அல்லா.”

”அப்புறம்?” தூக்கம் போனதாலும் இவள் சுற்றி வளைப்பதாலும் கொஞ்சம் கடுப்பு ஏறியிருந்தது.

”எண்டே பாஸ்போட் எண்டே கையில் அல்லா. வீட்டிலுண்டு”.
---
முழுப்படமும் இழுத்துக்கிட்டுகெடந்த சிவாஜி உசுரு, ராதாவப்பாத்ததும் நிம்மதியா கண்ண மூடுமே, அது மாதிரி இத்தன வருசம் எனக்குள்ள குமுறிட்டிருந்த ஏக்கம், ஒத்த நொடியில அவ சொன்ன ஸ்டேட்மெண்ட்ட கேட்டு நீங்க, என் பாரத்தயெல்லாம் எறக்கிவெச்ச சந்தோசத்துல ரொம்ப நிம்மதியா தூங்கப்போனேன்

Comments

  1. :))) செம கிளைமேக்ஸ்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்னீஸ் சுகுமார்..

      Delete
  2. Why do you need passport for travel within India?

    ReplyDelete
  3. ha ha ha ஹிஹிஹி ஹோ ஹோ ஹோ ROFL

    amas32

    ReplyDelete
  4. அப்பாடா.. மறுபடியும் பழைய கெத்துக்கு வந்துதிங்க.. செம்ம...செம்ம..

    ReplyDelete
  5. // ஒற்றைப்படை மற்றும் ரெட்டைப்படை சனிக்கிழமைகளில் //
    // Allergic toங்குற எடத்துக்கு நேரா Mathsசுன்னு எழுதிருந்துச்சாம். //

    மறுபடியும் படிச்சுட்டு சிரிச்சுட்டு இருக்கேன்.

    ReplyDelete
  6. Unga kitta innum nerya edhir paakkurom. :-)

    ReplyDelete
    Replies
    1. வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்.

      Delete
  7. Unga kitta innum nerya edhir paakkurom. :-)

    ReplyDelete
  8. suuuuuuuuuuuuuuuuuuuuuper

    ReplyDelete
  9. ''அந்த பொண்ணு சொன்னதுல என்ன தப்பு?'' ன்னு நிறையப்பேர் முழுத்திக்கொண்டிருப்பர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமா... ஆனா அத்தகைய நபர்களால்தான் நம் நாட்கள் சுவாரசியப்படுகின்றன.

      Delete
  10. இனி செத்தாடா சேகரின்னு நினைச்சிருப்பியே

    ReplyDelete
    Replies
    1. நோ.. அஏம ஜெண்டில்மேன் அல்லவா...

      Delete
  11. நல்ல நடை. நகைச்சுவை எப்பொழுதும்போல் ததும்புகிறது. அது உமக்கு கை வந்த கலை, இறைவன் கொடுத்த வரம். வாழ்க.

    கடைசியில் , வாடி என் கப்பக்கிழங்கே ன்னு கூவ தோணிச்சு :))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க.. எல்லாப்புகழும் இறைவனுக்கே

      Delete
  12. Great! You have the knack for words!

    ReplyDelete
  13. கலக்கல் தல. அடிச்சு ஆடுங்க. ஷோக்கா ஜெயிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஜெயிப்பெல்லாம் வேணாம். சந்த்தோஷம் இருந்தா போதும்.

      Delete
  14. machi muthalib sema sema sema
    enna oru villathanam antha penkuttikku

    ReplyDelete
    Replies
    1. yessu. சூதானமா இல்லன்னா நாம காலி.

      Delete
  15. வரிக்கு வரி செம.. அதுவும் உபகதை முதல் பாரா .. அல்டிமேட்..

    ReplyDelete
    Replies
    1. என்னோட கஷ்டம்லாம் ஒங்களுக்கு ஜோக்கா தெர்தா.. மைண்ட்ல வச்சுக்கறேன்

      Delete
  16. செம...க்ளைமேக்ஸ் சூப்பர்

    ReplyDelete
  17. Eppothavathu thaan blog update. Aana waiting waste aagala. Sema Bro

    ReplyDelete
    Replies
    1. Thanks for such kind words. Mean a lot.

      Delete
  18. பிச்சு... பிச்சு... அடிப்பொலி கிளைமாஸாண்னு.... :))))))

    ReplyDelete
  19. கொத்தவரங்கா15 May 2015 at 17:10

    ஹா ஹா சிக்குனாபோல இதுக்கு மேல நடந்தத சொல்லி தெரிஞ்சிக்கணும்ன்னு இல்ல பாஸ் : )))))))))))))))))))))

    ReplyDelete
  20. உங்களிடம் பேசும் ஒரு மல்லுவிடம் (டப்பாவை) குலுக்கவும்.//
    😂😂😂😂😂😂😂ROFL

    ReplyDelete
  21. அவளு ஆளு பயங்கரியாணல்லா...

    ReplyDelete
  22. இன்னும் வாசிக்குரேன்.. //குலுக்கவும் (டப்பாவை) //இத சென்சார் பன்னாம தமிழ் தெரிஞ்ச ஒருத்திட்ட அனுப்பி 😷😷

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂