I Love I

           வெறுமை என்னைக்கவ்விக்கொண்டது, தனிமை என்னுள் தவ்விவிட்டதுன்னு நெறயபேரு சோக ஸ்மைலியோட ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்காங்க (சோகமா இருந்தா அது Sadlyதான? Smiley எப்டி வரும்?) கொஞ்சம் தத்துவார்த்தமா யோசிச்சுப்பார்த்தா இந்த “உன் இன்மை உணர்கிறேன்” மேட்டர் ஒரு வகைல நம் இன்மையையே உணர்வதுதான். Its like a kind of, I miss you as I miss me. எந்த ஒரு விஷயத்தோடும் நாம தொடர்ந்து புழங்க ஆரம்பிச்சுட்டா அதோடு ஒரு Bonding / பழக்கம் ஆயிடுது. கொஞ்ச நாள்ல அது நம்மள ஒரு Comfort Zoneனுக்குள்ள வசதியா உக்கார வெச்சுடுது. அப்புறம் அதை உடைச்சிட்டு வெளிய வரத்தயங்குவோம். செக்குமாடு கதைதான். 40 / 50 வருசம் ஆதர்ச தம்பதிகள்ல பலது இந்த ரகம் தான்.

(எங்க அப்பாம்மாக்குள்ள நடக்காத சண்டையே கிடையாது. உண்மைய சொல்லணும்னா அவங்களோட சண்டையின் உக்கிரத்தப்பார்த்து, விவாகரத்து செய்துப்பாங்கன்னு கிட்டத்தட்ட 12 வருசமா நான் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திட்டிருந்தேன். 12 வருசம் ஓடிப்போனதுதான் மிச்சம். ஒரு கட்டத்துல அவங்க சண்ட போடுறது ஒரு மாதிரி டெய்லி ரொட்டீன் ஆகிடுச்சு. சண்ட இல்லன்னா லீவு நாளுக்கப்புறம் பேப்பர் வராதப்ப ஒரு வெறுமை உணர்வு வருமே, அந்த மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சோம் நாங்க எல்லாரும். இப்ப எங்கப்பாம்மா டைவேஸ் பண்ண சான்ஸேயில்ல. பிரிஞ்சுட்டா சண்ட போட முடியாது, அதுக்காச்சும் நாம சேர்ந்திருக்கணும்னு ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க. தினச்சண்டை has become their comfort zone. They are happily fighting for ever).
 
     இதே மாதிரி, நாம வளர்க்குற பூனையோ, டெய்லி பயணிக்கிற ரூட்டோ, பார்க்குற வெப்சைட்டுகளோ, அடிக்கிற சைட்டுகளோ எல்லாமே ஒரு கட்டத்துல பழகினதும் நம்மில் ஒரு அங்கமா அந்த விஷயமும் ஆயிடும். அது மாறுகிறபோது மனம் பதட்டம் அடைகிறது. அந்த குறிப்பிட்ட விஷயத்துல நாம நம்மைக்காண ஆரமிச்சதும் நம் சுயம் / Ego அதுகூட ஒன்றிடுது. அதுக்குப்பிறகு பிறரிடம் அந்த விஷயத்துக்காக நாம சண்ட போடறதெல்லாம் அதோடு தொடர்புடைய நமக்காகத்தானே ஒழிய, வேறு எதற்கும் இல்லை.

             பை பாஸ்ல சுத்தி கொழப்பாம சிம்ப்பிலா சொன்னா, கடவுளுக்காக போடுற சண்டை, ராஜா ரஹ்மான் சண்டை, அஜித் விஜய் இப்படி எல்லா வாக்குவாதங்களுக்கும் பிரதானம் அந்த விஷயத்தோட நாம உண்டாக்கியிருக்குற தொடர்புதான். பிரபல மகான் ஒருவர் ஒரு டுவிட் போட்டிருக்கார், “கடவுளைத்திட்டினால் யாருக்கும் கோபம் வருவதில்லை, ஏசுவையோ அல்லாவையோ, சிவனையோ திட்டினால்தான் கொதிக்கின்றனர்” என்று.

    பொதுப்படையா கடவுளத்திட்டினா, வசதியா “இவன் அடுத்தவங்க கடவுளத்தான் திட்டுறான்”னு சொல்லிட்டு நகர்ந்துடுவோம். இதுவே நாம் வணங்கும் கடவுளத்திட்டினா, ”இவன் எப்புடி “நான்” வணங்கும் கடவுளத்திட்டப்போச்சு?”ன்னு சொக்காயப்புடிப்போம். அந்த “நான்” தான் இங்க முக்கியக்காரணி. உண்மைலயே கடவுள் பிஸ்த்துன்னு சொல்றவன், யாராச்சும் ”கடவுள் இல்லை”ன்னு சொன்னா, ”கடவுள் இல்லன்னு சொல்றதுக்கே உனக்கு கடவுள் தேவப்படுறார் பாத்தியா, அதான் கடவுள்”னு கார்க்கி பவா ஸ்டைல்ல பதில் சொல்லிட்டுப் போய்டுவான்.

        என்னதான் ராஜா / ரஹ்மான் / (இன்ன பிறர்) அற்புதமா இசையமைச்சிருந்தாலும் நாம இவங்களுக்காக சண்டை போடுறது எதுக்குன்னு அடிமனச கீறிப்பாத்தா அவர்களின் இசை நம்ம வாழ்க்கைய எதோ ஒரு இடத்தில் தொட்டிருக்கும். எதோ ஒரு நபர் /நினைவு / உணர்வு / அனுபவத்தோடு அந்த இசைத்துண்டு பிணைந்திருப்பதால அந்த இசைய நம்மில் ஒரு துண்டாகவே பாக்குறோம், நம்மை நாமே பிரஸ்தாபிக்க அடிதடில எறங்குறோம். சர்வைவலுக்கான போர். இதைத்தவிர்க்க முடியாதான்னா, முடியும். நிச்சயம் முடியும். ஆனா அதுக்கப்புறம் லைஃப் போர் அடிச்சிரும்.

   ஜே.க்ரிஷ்ணமூர்த்தி பாணியில தத்துவ விச்சாரங்கள்ல இறங்கிப்பாத்தம்னா, உயிரணுத்துளியா வெளியேறினதுல இருந்து நம்ம உயிர் ஆவியா வெளியேறுறவரைக்கும் இந்தப்போட்டியையும், போரையும் செஞ்சுட்டே வருவோம் (நம்மை அறிந்தோ அறியாமலோ). எப்போது அடுத்த ஒரு விஷயத்தினுள் நம்மை நாம்  உணர ஆரம்பிக்கிறோமோ அப்போதே அதைக்காதலிக்க, போற்றிப்போஷிக்கத்துவங்குறோம். எதிலெல்லாம் நாம் இல்லை என நம்புகிறோமோ, அதை ஒதுக்க, துவேஷிக்கத்துவங்குறோம்.

இந்த அண்ட அகண்டப்போர் அனைத்தும் “நான்” என்னும் ஒரு ரூபத்துக்காகத்தான் என்றும், அந்த ரூபமும் ரூபமல்ல, அரூப மாயை என்றும் உணரும்பொழுது புத்தன், ஆஸ்கர் ஒயில்ட், அனானிமஸ் ஆகியோரைப்போல போன்ற ஞானவானாகிறோம்.

ஹர ஹர மஹாதேவ் கீ ஜெய்!

Comments

  1. EPPodum pola sema writeup.nachunu pottula adicha madiri solliteenga.ana. ayiram muthalib vanthalum thirunthuvomanu niraya peru kedakkanga. KADICHILA ungalayum aruva thooka vachiduvanuva. SAKKUATHAI,avvvv.

    ReplyDelete
    Replies
    1. சாத்வீகமான வழியிலேயே போவோம் கலில் :-)

      Delete
  2. உண்மை உண்மை. நல்லா ஆனுபவத்தோட யோசிச்சு எழுதியிருக்கீங்க மருமகனே. சூப்பர் :)

    "சர்வைவலுக்கான போர். இதைத்தவிர்க்க முடியாதான்னா, முடியும். நிச்சயம் முடியும். ஆனா அதுக்கப்புறம் லைஃப் போர் அடிச்சிரும். " வாவ் !

    நன்றி வாழ்த்துக்கள் :)
    @chinnapiyan

    ReplyDelete
    Replies
    1. கோட்டான கோட்டி நன்றி சின்னப்பையன் சார்.

      Delete
  3. அகம் பிரம்மாஸ்மி!! :-) அருமையான எழுத்து (”என்னை” இவ்வெழுத்தில் காண்பதாலோ?! ;-) ) !!!

    ReplyDelete
    Replies
    1. ஆம். என்னைத்தரிசிக்கும் இடமெலாம் புக நினையும் என் மனம், எண்ணெய் தரிசிக்கும் இடமெலாம் யூஎஸ் புக நினைவதுபோல ;-)

      Delete
  4. அருமை... அழகான எழுத்து நடை.. வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அஹம் பிரம்மாஸ்மி

    நல்ல கருத்து டோலர் அப்படியே அதுல மெட்ராஸ் பட சண்டையையும் சேத்தி இருக்கலாம்.. ;-))

    பி.கு. - விஜய் டிவி கனெக்‌ஷன் ப்ரோகிராம் பார்ப்பதை தவிர்க்கவும் ;-))))

    ReplyDelete
    Replies
    1. யாம் அறிந்தவரை அஹம் பிரம்மாண்டாஸ்மி ரெண்டே பேருக்கு தான் ;-))))

      Delete
  6. நான் சிந்தித்துப் பார்த்திராத கோணம்.

    ReplyDelete
  7. ம்ம்ம் இதுபோல அநேகம் தடவ நான் யோசிச்சதுண்டு. உலக போர்கள் எதற்கு, ஊர் , வட்டம் , மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் எல்லாமே நல்லாட்சி நடத்த அட்மினிஸ்ட்ரக்டிவ் காக தானே ஆனா அதுக்குள்ள இருக்கும் நிஜத்தை உணராம ஏன் இவ்வளவு பிரச்சனை னு. இதுக்கு தான் என்னும் "நான்" ல தொடங்கி, மற்றம் கொண்டு வந்து செயல்படுத்தி, அப்படியே அதை நம் குடும்பம், தெரு , ஊர் இப்படி வட்டம் , மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் னு கொண்டு போகணும். அதுக்கு இதய மாதிரி ஒற்றை கருது உள்ள மக்கள் எல்லாம் ஒண்ணா சேரனும்... இப்படி நிறையா யோசிச்சிருக்கேன்....

    ஆனால் ஆகச்சிறந்த உடனடி தேவை இந்த தான் என்னும் "நான்" உணர்ந்து , உணர்வுபூர்வமான யோசிச்சு நடைமுறை எதார்த்தம் அறிந்து திட்டம் வகுத்து செயல் படுத்துவது தான்... அதை நீங்க அழகா உங்க பாணில சொல்லிடீங்க

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂