ஆணென்ன பெண்ணென்ன...

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்கும் முந்தைய குடியை லைட்டாக எட்டிப்பார்த்தால் அங்கும் சிதறிக்கிடக்கும் சண்டையில் பிய்ந்த சடைமுடி.

என்னதான் "அவ இல்லாம எனக்கு வாழத்தெரியாதா" எனவும், "இவனில்லாட்டி சூரியன் உதிக்காதா" எனவும் இரு சாரார்களும் விசுப்பட க்ளைமாக்ஸ் டயலாக் அடித்தாலும்  ஒரு சோம்பேறி ஞாயிறு மதியமோ, மழை நாளின் குளிர் நிறைந்த காலை ஏழு மணியோ அல்லது பின்னிரவின் பேரமைதியில் 3பாய்ண்ட் வால்யூமில் ஒலிக்கும் இளையராஜாவின் வயலினோ இவர்களின் உறுதியை, அழுத்தைத்தை டபுல் ஆம்லேட்டாக கலைத்துவிடும்.

பெரும்பான்மையான சண்டைகளில் திரும்பத்திரும்பப்பேசுற நீ என வருவது "என்னப்புரிஞ்சுக்கவே மாட்டியா?"
முப்பது வருசம் ஒன்னாச்சேந்து குப்ப கொட்னவனும், குட்டி கொட்னவளும் அதத்தான் சொல்றாங்க, முந்தா நேத்து காதோல் மலர்ந்த கன்னிக்காதலர்களும் அதயேதான் சொல்றாங்க.

இவங்க சொல்ற வார்த்ததான் ஒன்னே தவிர சொல்ல வர மேட்டர் வேற. பெண்கள் எதிர்பார்ப்பது தன்னை உணரும் ஒருவரை. ஆண்கள், தன்னைப்புரிந்துகொள்ளும் ஒருவரை. தலைபோற காரியமா இருந்தாலும் பெண்ணுக்கு பேசிட்டா போதும், அந்த உணர்வக்கடத்திட்டதா அவ நினைப்பா. பதிலுக்கு அவ எதிர்பார்ப்பது பிரச்சினைக்கான தீர்வு அல்ல. எவ்ளோ பெரிய பிரச்சினைன்னாலும் அதுக்குத்தீர்வுகாண பெண்களால் முடியும். தன்னையே கிழிச்சு புது உயிரத்தர பொண்ணுக்குக்கேவலம் இந்த புறப்பிரச்சனைகளுக்கான தீர்வா தெரியாது?
இதை அறியாம (உணராம, to be precise) ஆண்கள் தீர்வு சொல்ல முனைய, அதை எதிர்பார்க்காத பெண் தேமேன்னு இருக்க, இதப்பாத்து ஆணுக்கு கோபம் வர, வாக்குவாதம் வளர்ந்து வெளக்குமாத்தடியில வந்து நிக்கும்.

இதேபோல் ஆண்களுக்கு ஆபீசிலோ, பஸ்ஸிலோ, கடையிலோ, எங்கெங்கோ எவனெவனோ தாலியை அறுத்து விட்டிருப்பான். அவர்களை எதிர்த்துப்பொங்கவும் முடியாமல் (பொங்கினால் குடும்பம், வருமானம் பாதிக்கப்படலாம்) விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக்கொண்டு இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் தன்னை மறந்து உட்கார்ந்திருக்கும்போது மனைவி வந்து கேட்பார், "என்னாச்சு, ஏன் உம்முன்னு இருக்கீங்க?", மேனேஜர் "நீயெல்லாம் எங்க உருப்பட, ஒன்னையும் நம்பி ஒருத்தி கல்யாணம் பண்ணிருக்கா பாரு" என்ற ரேஞ்சில் ஆபீசில் செய்த பிரசங்கத்தை சொல்லி அழவும் ஈகோ தடுக்கும். "ஒன்னுமில்ல" என்ற ஒற்றை வார்த்தை வந்ததும், "முந்தி மாதிரி இல்ல நீங்க, ரொம்ப மாறிட்டீங்க, ப்லா ப்லா ப்லா" என மூக்குறிஞ்ச, இவர் பொங்க, மீண்டும் வெளக்குமாத்தடியில் வந்து நிற்கும்.

ஆண் தன் புரிதலின் மூலம் பெண்ணை உணர்தலும், பெண் தன் உணர்தலின் மூலம் ஆணைப்புரிதலுமே இருவரின் தேவை. Though it sounds so simple, it is actually not, but yes, in fact.

இதில் உள்ள சிறு நகைமுரண், ஆண்கள் முன்னாள் பிரதமர் போல, பேசாமல் சாவடிப்பர். பெண்கள் இந்நாள் பிரதமர் போல, பேசியே... (சாவடிப்பர்னு சொன்னா தே.பா சட்டம் பாயலாம் ஆதலால் அது வாசகரின் தேர்வுக்கு விடப்படுகிறது).

பெண்கள் விரும்புவது சொல்லைக்கூட இல்லை. ஒரு சிறு செய்கை. நான் இருக்கேன் என உத்திரவாதமளிக்கும் ஒரு சின்ன gesture. ஒரு முத்தமோ, முதுகில் சின்ன tapபோ, ஒரு ஸ்மைலோ போதும். உள்ளுக்குள்ள 250 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாததா இந்த எலுமிச்சைல ஓடும்னு கேட்டாக்கா, ஆமா ப்ரோ. ஓடும். அவ்ளோ பெரிய சூரியன் நாள் முழுக்க எரிஞ்சும் பத்தவெக்க முடியாத மூங்கில் காடு, சின்ன தீப்பொறியில பத்தும். பத்த வைங்க.

சுய முன்னேற்ற நூல்கள் படிச்ச அடுத்த மூணு நாளைக்கு ஒடம்பெல்லாம் முறுக்கேறி பாஸ்ட்டிவ் vibeல எல்லாமே மாறினதாத்தோணும். அதுபோல இந்தக்கட்டுரையப்படிச்சதும் இன்னிக்கு சாங்யாலமே "டாஆஆர்லிங்"னு போய் கட்டிப்புடிச்சு முத்தா வெச்சிங்கன்னா, "என்ன தப்பு பண்ணிட்டு வந்துருக்கோ தெரியல, இப்புடி ஓவர் பீலிங்சாவுதுன்னு" டவுட் பண்ணுவாங்க. அதனால எப்பவும் போல உர்ர்ர்ர்ருன்னே இருங்க. தினமும் கொஞ்சங்கொஞ்சமா உர்ர்ர்ர் - உர்ர்ர் - உர்ர் - உர்ன்னு கொறஞ்சு உ- உம் - உம்ம் - உம்ம்ம்மான்னு மாறுங்க. Slow and steady wins.

கடைசியா ஒன்னே ஒன்னு. காதல் மறுக்கப்படுறதவிட மறக்கப்படுறது ரொம்ப ரொம்பக்கொடூரம். அந்த தண்டனைய எதிரிக்கே கொடுக்கக்கூடாது. நம்மோடயே நகமும் சதையுமா இருக்கவங்களுக்கா கொடுக்கணும்?

Comments

  1. //தன்னையே கிழிச்சுப் புது உயிரைத் தர பொண்ணுக்குக் கேவலம் இந்த புறப் பிரச்சனைகளுக்கான தீர்வா தெரியாது?//

    Hats off

    //காதல் மறுக்கப்படுறத விட மறக்கப்படுறது ரொம்ப ரொம்பக் கொடூரம்//

    Hats off,Gloves off!

    ReplyDelete
    Replies
    1. superb wordings and nice article

      Delete
    2. நல்ல காலம் கே.ஆர்.எஸ்ஸுக்கு ரெண்டு பஞ்ச் லைன் மட்டும் புடிச்சிருந்தது. இல்லைனா, பாண்ட்ஸ் ஆஃப், கோவணம் ஆஃப்ன்னு பப்பி ஷேம் ஆயிட்டிருக்கும்!!! ;)))

      Delete
    3. நன்றி முருகா!

      @அனானி: வக்ரம் ப்ரோ

      Delete
  2. Mutual adjustment,mutual understanding,mutual help. இப்படி "mutual" என்கிற ஒரே வார்த்தையில் இருக்கிறது இன்ப இல்வாழ்க்கை (இன்பம் இல் வாழ்க்கை அல்ல.இன்ப இல் வாழ்க்கை!)

    ReplyDelete
    Replies
    1. சரியாய்ச்சொன்னீங்க அய்யா. Mutual bonds are subject to riskகுன்னு அங்கங்க குரல் கேக்குறதும் மறுப்பதற்கில்ல

      Delete
  3. படிக்க கஷ்டமா இருக்கு If possible add line breaks or change font

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்
    -@Singamulla

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for the timely intimation. As i published from mobile alignment was a mess. Thanks again.

      Delete
  4. நல்லா இருக்கு பாஸ்... Feel, understand இந்த 2 வார்த்தையிலே ஆண்,பெண் இருவரின் அகச்சிக்கல்களை புரிய வச்சிட்டீங்க..

    ReplyDelete
    Replies
    1. பாஸ்... அது ஆழக்கடல். நாம தொட்டது துளிகூட இல்ல

      Delete
  5. இங்கே எழுதியிருப்பதை ஒரு பெரிய அங்கி மாட்டி, நீண்ட தாடி வளர்த்து, சொந்தப் பெயரையும் மாற்றி, இப்பதிவைப் பலப் பகுதி சொற்பொழிவாக்கி தொலைக் காட்சியில் சேனலில் நடிகர்கள்/பிரபலங்கள் கேள்வி பதில்களுடன் அரங்கேற்றம் செய்தால் அடுத்த corporate Guru நீங்கள் தான்.

    Superb analysis. When my husband and I fight, this is what I try to tell him. Of course I don't understand his silence too :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா. நடிகர்கள் பிரபலங்கள் வேண்டாம். நடிகைகள் பிரபலைகள் வச்சுப்பம்.

      உங்களுக்கும் சாருக்கும் சண்டையா??? Surprise to me.

      Delete
  6. முத்தான கருத்து சொன்ன முத்தாத முத்தே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பெரிய பாராட்டு சொன்ன பெத்தே நன்றிகள்

      Delete
  7. It is all come down to give and take plus the experience to put up with each other!
    well written
    Bravo!

    ReplyDelete
    Replies
    1. Yes. If the bonding is directly proportional to experience, heaven on earth is possible. Thanks for ur comment.

      Delete
  8. அருமையான பதிவு :)

    ReplyDelete
  9. Super Ji... Well said! Feel & Understand.... Super....

    ReplyDelete
  10. Replies
    1. நன்றிங்க நந்தினி.

      Delete
    2. நன்றிங்க நந்தினி.

      Delete
  11. யதார்த்தங்களை வேடிக்கையாக சொல்லி புரியவைப்பதில் வல்லப சாய்பு நீர். வார்த்தை ஜாலங்கள் என்னமா கோர்வையாக வந்து விழுகிறது மருமானே !. கடைசியாக எங்கும் திசை மாறாமல் சொல்ல வந்த கருத்துக்கு வந்து நிக்கிறீர்களே Hats off to you வாழ்க நீடுழி :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சின்னப்பையன் சார். சந்தித்து ரொம்ப நாளாச்சு. மெட்றாஸ் எப்ப வரீங்க?

      Delete
    2. அட ! நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோமா !!
      உங்களை ஒருதடவையாவது சந்திக்க ஏங்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.சந்திப்போம் நிச்சயமா :)

      Delete
    3. (லிச்சி ஜூஸ் வாங்கித்தருவீங்கன்னா) வரும் ஜனவரி புத்தகச்சந்தையில் சந்திப்போம்

      Delete
  12. ரசனையான எழுத்து உங்களுடையது. நிறைய எழுதுங்கள். நான் உங்களது விசிறி. ஓய்வாக இருக்கும்போது ஒரு மிஸ்டுமெயில் தாருங்களேன். :‍-))

    thaamiraa@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டுமெயில் - சுஜாதா ரசிப்பார் இதை. தங்கள் சித்தப்படி அனுப்சிட்டேன். நன்றி.

      Delete
  13. Enjoyed every bit of this article .. :)

    ReplyDelete
  14. சான்சே இல்ல பாஸ் செம செம செம

    ReplyDelete
  15. "டாஆஆர்லிங்"னு போனா சந்தேகம் தான் வருதுங்கறது ரொம்ப கரெக்ட்
    உங்கள் எழுத்து நடை பிரமாதம்

    ReplyDelete
  16. அட்டகாசம். உங்க ப்ளாக். ஒன்னொன்னா படிச்சிட்டிருக்கேன். இது என்ன கமெண்ட் எழுதாம போக விடமாட்டேங்குது. மிக அருமை தோழா!

    ReplyDelete
  17. // இந்தக்கட்டுரையப்படிச்சதும் இன்னிக்கு சாங்யாலமே "டாஆஆர்லிங்"னு போய் கட்டிப்புடிச்சு முத்தா வெச்சிங்கன்னா, "என்ன தப்பு பண்ணிட்டு வந்துருக்கோ தெரியல, இப்புடி ஓவர் பீலிங்சாவுதுன்னு" டவுட் பண்ணுவாங்க. அதனால எப்பவும் போல உர்ர்ர்ர்ருன்னே இருங்க. தினமும் கொஞ்சங்கொஞ்சமா உர்ர்ர்ர் - உர்ர்ர் - உர்ர் - உர்ன்னு கொறஞ்சு உ- உம் - உம்ம் - உம்ம்ம்மான்னு மாறுங்க. Slow and steady wins.

    கடைசியா ஒன்னே ஒன்னு. காதல் மறுக்கப்படுறதவிட மறக்கப்படுறது ரொம்ப ரொம்பக்கொடூரம். அந்த தண்டனைய எதிரிக்கே கொடுக்கக்கூடாது. நம்மோடயே நகமும் சதையுமா இருக்கவங்களுக்கா கொடுக்கணும்? //

    அருமை - வழக்கமான சிரிப்பு கொஞ்சம் தேவைக்கேற்ப அங்கங்க சரியாய் கொஞ்சமா இருந்தாலும் கடைசீல உங்க ஸ்டைல் ஒரு டச் ... அது நச்...... நல்ல பதிவு

    ReplyDelete
  18. Nice one. But ithellam en pondaattikku puriyuma. #doubtu. Try pannuvom. Apdiye unga twitter id sollunga

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂