காருக்கெதுக்கு அச்சாணி?


ஓட்டலில் அடுத்தவர் டேபிளைப்பார்த்து டிட்டோவாய் ஆர்டர் செய்வதில் துவங்கி, தம் பிள்ளைகளை குறிப்பிட்ட ஸ்கூல்/காலேஜில் சேர்ப்பது, கல்யாணத்துக்கு கிலோ கணக்கில் நகை நட்டுபோட்டு (உண்மையிலேயே நட்டு போடுவாங்களா என்ன?) பஃபேங்குற பேர்ல தட்டுல இருக்க பாதி சாப்பாட்ட குப்பைக்கு அனுப்புற வரை கூச்ச நாச்சமேயின்றி அடுத்தவர் செய்வதையே செம்மறியாடாய் நம் மக்கள் செய்வதற்கான காரணத்தை எங்கே தேடுவது?

வரதட்சணைக் கொடுமை தலைஸ்டெயிட்டனிங் செய்து கொண்டு ஆடுகிறது என ஒரு பக்கம் குமுறிக்கொண்டே, ”நம்ம சொந்தக்காரனுங்கள்லாம் மூக்கு மேல வெரல வெக்கிற மாதிரி என் வீட்டுக்கல்யாணத்த நடத்துறேன் பார்” என்று வறட்டு கௌரவத்திற்காக, இருக்கும் எல்லா டிசைன் வட்டியிலும் கடன் வாங்கி, பிற்பாடு விழிபிதுங்கி சுற்றுவது ஏன்? விருந்துக்கு வருபவர்கள் மூக்கில் விரல் வைக்க வேண்டுமென்றால் முள்ளங்கியும் மொச்சக்கொட்டையும் போட்டால் போதாது? ஃபன்னி ஃபெல்லோஸ்.

வீண் பெருமையோடும் பகட்டோடும் சுத்திக்கிட்டிருக்க நம் அனைவரையும், நுகர்வுக்கலாச்சாரமானது, அம்மன் பட க்ளைமாக்ஸ் ரம்யா கிருஷ்ணனாய் மாறி சூலாயுதத்தில் டாஆஆஆஆய் என மொத்தமாய்க்குத்தி தனக்குப் பலியாக்கி வைத்திருக்கிறது.

”நமக்கு பிடிக்காதவர்களிடம், பத்துபிசா பெறாத வெத்து சீன் போட, நம்மிடம் இல்லாத பணத்தைக்கொண்டு நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம்” என ”யாரோ” எனும் அறிஞர் கூறியதாய் ஃபேஸ்புக் வட்டாரம் தெரிவிக்கின்றது.

"அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா” எனக்கேட்ட சௌகார் ஜானகிகளிடம், ”அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி” என அறிவுறுத்திய ஸ்ரீகாந்துகளெல்லாம் முதுமலையேறிப்போய், இன்று ”ஆமாண்டி பட்டு, அம்புஜம் சும்மா கிண்ணுன்னு இருக்காஎன்று கூறி winking சுமைலியிடும் ஸ்ரீசாந்துகளாக மாறவைத்திருக்கிறது இந்த க.காதல் சண்முகம்.

இன்றைய செய்தித்தாள்களில் அந்தப்பத்திரிகையின் பெயருக்கு இடமிருக்கிறதோ இல்லையோ, ஒரு பக்கம் கூட தவறாது கள்ளக்காதல் செய்திகள் மட்டும் திவ்வியமாய் நிறைந்துள்ளது. வானிலை, வணிகம், விளையாட்டு செய்திப்பக்கங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இதெல்லாம் ஒரு சைடு திங்கு திங்குன்னு ஆடுதுன்னா, ஏன் எதுக்குன்னு காரணம் புரியாம, தெரிஞ்சுக்கவும் முயற்சிக்காம, வடிவேலாட்டம் கெணத்துப்பக்கத்துல நின்னு பதினெட்டு பதினெட்டு பதினெட்டு பதினெட்டுங்குற கோஸ்ட்டி ஒரு புறம்.

என்னதான் ராஜா(சார்), ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க என்று மெட்டிட்டிருந்தாலும் புதுசா கல்யாணமான அத்தனை ஜோடிகளின் பெரும்ம்ம் சாபம் பெறும் மாதம்னா அது ஆடி தான். ஆடியில் புதுமணத்தம்பதிகளை பிரித்து வைப்பதேன் எனக்கேட்டால், இந்த மாசத்தில் கூடினா வெய்ய காலத்துல புள்ள பொறக்கும். அதான் பிரிச்சு வைக்கிறோம் என பதில் வந்து விழுகிறது. அது ஏன் முதல் வருடத்திற்கு / முதல் குழந்தைக்கு மட்டும் இப்படி பார்க்குறீங்கன்னா அதுக்குள்ள நம்மள channel மாத்திட்டு மானாட மயிலாட பாக்கப்போய்டுறாங்க.

பு.ம.தம்பதிகளின் Additionனினால் தப்பான நேரத்தில் ஏற்படும் மக்கட்தொகை Multiplicationதான் இந்த ஆடி மாத divisionனுக்குக் காரணம் என்றால் டெக்னாலஜி உச்சத்தில் இருக்கும் இந்த  Table Mate யுகத்திலே எத்தனையோ safety & security சாதனங்கள் இருக்கின்றனவே, பின் ஏன் இன்னும் இந்த பிரித்தாளும் divide & conquer சூழ்ச்சி?

இந்தக்கொடுமையப்பாத்துட்டு உஸ்ஸ்ஸுன்னு உக்காந்தா, அந்தமானையே சென்னைக்கு அடுத்த அப்பார்ட்மெண்ட்டாக்கிய ரியல் எஸ்டேட்டை, ஏரியல் உச்சத்திற்கு உயர்த்திய one of the  முக்கிய காரணியாகிய ஐடிக்காரர்களின் அலும்பு இன்னும் டுர்ரானது.

குளோனிங் செய்றதுல, இந்த ஐடி கம்பெனிக்காரங்களை அடிச்சுக்க இன்னொரு ஐடிக்காரனாலதான் முடியும். வெள்ளக்காரனுக்கு வேலை செய்றதெல்லாம் ஓக்கே. ஆனால் அவர்களின் ஒவ்வொரு அடியையும் ஒட்ட ஒழுகி பின்பற்றி பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு அடம்பிடிக்கிறதுதான் ஏன்னு புரியல. உச்சபட்ச மார்கழிக்குளிரிலேயே 45 டிகிரி கொளுத்துற நம்ம நாட்ல, கழுத்தை நெறிக்கும் டை, காலை நசுக்கும் ஷூஇடுப்பை இறுக்கும் டக்-இன் என்று வெள்ளையர்களின் உடைக்கலாச்சாரத்தை ஏன் ctrl+C ctrl+V செய்ய வேண்டும்அடி வயித்துல வேர்வை சேர்ந்து அரித்து டக்-இன்னை வெளியே எடுத்துவிட்டா உடனே கங்காணிட்டருந்து மெயில் வந்துடும், புரொபசனல் கொரியராக ஆபீசிற்கு உடையணிந்து வரவும்னு. இதுல உச்சபட்ச காமடி என்னன்னா, இந்த ட்ரெஸ்ஸிங் எட்டிகுட்டீ (etiquette ) எல்லாம் ஆண்களுக்குத்தான். பெண்கள் செருப்போ, ஸ்லீவ்லெஸ்ஸோ, லெக்கின்ஸோ, மினி ஸ்கர்ட்டோ போட்டு வருவது எந்தவொரு ஏய்க்கிறான் மேய்க்கிறான் கம்பெனியின் டிகினிட்டி அண்டு டெகோரத்துக்கும், எவ்வகையிலும் பாதிப்புவந்துவிடாதாம். நல்லது. நடத்துங்கடே.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று போராடிய, சாமி சிலையை செருப்பால் அடித்த தனக்கே ஊரெங்கும் சிலை வைத்து வணங்குவதைப் பார்த்தால் பெரியாரின் மைண்ட்வாய்ஸ் நொந்தபடி சொல்லியிருக்கும் - கடவுள் இருக்கான் குமாரு”.

இது போன்ற சாமானியர் முதல் கல்தோன்றா மண்தோன்றா காலத்தே மூத்தகுடி எங்க குடிதாம்வே என டாஸ்மாக்கில் கும்மியடிக்கும் நம் உயர்குடிமக்கள் வரை செய்யும் இன்னும் பலப்பல அலப்பறைகளின் உள்ளர்த்தங்களை கூகுளாண்டவரோ குஷ்புசுந்தரோ தான் வந்து விளக்க வேண்டும்.

டிஸ்கி: ”என்னா ப்ரோ, கருத்தெல்லாம் சொல்ல ஆரமிச்சாச்சா…ம்ம்..ம்ம்..” எனும் எனக்கு வேண்டப்பட்ட மைண்ட்வாய்சுகளே… உங்களையெல்லாம் ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம், பிம்பிலிக்கி பிலாப்பி பெரியார் வந்தாலும், ம்ம்ஹூம்ம்…

Comments

  1. செம...... பிம்பிளிக்கி பிளாக்கி சிரிப்பு வெடிகள் ;))))

    ReplyDelete
  2. மரண மாஸ் Bro :)

    ReplyDelete
  3. செம! :-)) நல்லா வாய்ல வருது, சொல்லிடப்போறேன்னு சொல்வாங்க, உங்களுக்கு நல்லா கைல வருது எழுதிட்டீங்க :-)) தொடரட்டும் உங்கள் சிரிக்க/சிந்திக்க வைக்கும் பணி :-)

    amas32

    ReplyDelete
  4. :-) அருமையா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Nice write up. I couldn't stop laughing..😊..I thoroughly enjoyed reading it..

    ReplyDelete
  6. என்னைப்போலவே நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க....

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா சிரிச்சிகிட்டே நிறைய கருது சொல்லீட்டிங்க . கடைசீல பினிஷிங் டச் அருமை..

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂