கரப்பாம்பூச்சி!

அலுவல் அலுப்பு முடித்து
வீடு திரும்பையில்
என் முன் ஓடியதொரு
கரப்பாம்பூச்சி.

மலிவு விலை
பேரீச்சம்பழ நிறம்,
பச்சை விழுமுன்
பறக்கத்துடிக்கும்
பைக்-காரர்களின் அவசரம்,
இரண்டும் கொண்டிருந்தது
இந்தக்கரப்பாம்பூச்சி.

விண்ணிலிருந்து மண் சேர்ந்த
மழைத்துளி
தாழ்வாரம் நோக்கி விரைவதுபோல்
இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்தது
இந்தக்கரப்பாம்பூச்சி.

அதைக்கொன்றுவிட
காலைத்தூக்கும்போது
எங்கெங்கோ படித்த கரப்பான்கதைகள்
கண்முன் விரிந்தன.

பல ஆயிரம் ஆண்டுகளாக
பரிணாமம் மாறாததாம்
இந்தக்கரப்பாம்பூச்சி.

அணுகுண்டு போட்டு
அகிலமே மாண்டாலும்
அடைப்புக்குள் புகுந்து
ஜீவித்திருக்குமாம்
இந்தக்கரப்பாம்பூச்சி.

எரிமலைக்குழம்புகள்
வெடித்துச்சிதறியபோதும்
எம்பிக்குதித்து
எதிர்த்து வாழ்ந்திடுமாம்
இந்தக்கரப்பாம்பூச்சி.

உலகையே ஆட்டுவிப்பது ஆண்கள்
அந்த ஆண்களை ஆட்டுவிப்பது பெண்கள்
அந்தப்பெண்களின் உலகையே ஆட்டுவிக்குமாம்
இந்தக்கரப்பாம்பூச்சி.

என்ன காரணத்தினாலோ
தூக்கிய காலை கீழிறக்கி
கரப்பானை சாலையோரமாய் ஒதுக்கிவிட்டு
வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு வேளை...
மனோவசியமும் அறிந்திருக்குமோ
இந்தக்கரப்பாம்பூச்சி?


Comments

  1. உவமைகள் நல்லா இருக்கு.
    "ஆண் , பெண் , கரப்பாண்பூச்சி" ha ha ha

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂