Tuesday, 7 April 2015

#SuMuWeddingThe power of a programming language lies in creating things that the inventor hasn’t ever dreamt of. – MaGrumpy
   இத ஏன் இப்ப சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூபாய்க்கு விக்குது மக்களே, அது மட்டுமில்லாம குரியகோஸ் புஸ்கோவ்ஸ்கி, Brishi chopsey (ரிஷி ஆப்சினு உச்சரிக்கனும்) என்பது போன்ற சைனீஸ், தாய், இட்டாலியன் பேர்களை, நானறிந்த இலக்கியவாதிகளிலே என்ற ரேஞ்சில் அவ்வப்போது அவுத்துவிட்டாத்தான் இங்க தாக்குப்பிடிக்க முடியும்.  
 
   தமிழன் என்றோர் இனமுண்டு தனியே எமக்கோர் குணமுண்டுன்னு சொல்லுவாங்க. இது டுட்டருக்கு மிகப்பொருத்தம். இங்லிஸ் இந்தி மல்லு இப்புடி பல உலகங்கள்ள டுட்டர் செயல்பட்டாலும் இங்லிஸ்க்கு அடுத்து டுட்டர வெச்சு என்னென்னமோ பண்ணுனது தமிழ் டுட்டர்தான் (அத 'சந்து'ன்னு அன்போடு அழைப்போம்)
காலை அரும்பி பகலெல்லாம் போதாமலாகி
மாலையிலும் மலரும் இந்நோய்
(வள்ளுவர் இன்று இருந்தால் இதான் சொல்லிருப்பார்னு நான் சொல்ல வரேன்னு உங்களுக்கே தெரியும். அதனால அத strike out பண்ணிட்டேன்)
   பல ஃபேஸ்புக்வாசிகளுக்கு டுட்டரும் டுட்டர்சும் அலர்ஜி. ஏன்னு தெரியல. அவங்களோட உள்வட்டத்தில, டுட்டர்களை இழிவு பண்ணி கேலி பேசுவதாகவும் அவ்வப்போது தகவல் வருகிறது. சூரியனின் சூடு சுட்டெரிக்குதுன்னு சொல்லி அத அணைக்குறேன் பார்னு சுண்டெலி சூரியனப்பாத்து சுச்சா போச்சாம். [அட்டாக் மீ]. அப்டி இருக்கு ஃபே.பு.வா-களின் டுட்டர்ஸ் மீதான  க்ரட்ஜ்.
   அப்டி இந்த டுட்டர்ல என்னதான் நடக்குது? என்று கேட்டால், கொலையத்தவிர மீதி எல்லாமே நடந்துருச்சு. காதல், கல்யாணம், பிசினஸ், ரத்தசேவை, தேர்தல், மதப்ரச்சாரம், கடலை, தற்கொலை மிரட்டல் இப்புடி எண்ணற்றவை. அவ்வளவு ஏன்?  மோதியே எங்க சக டுவிட்டர்தான் தெரியுமா?
   கடந்த சூரமொக்க பத்திகள சகிச்சுட்டு இதுவரைக்கும் நீங்க வந்துருந்தீங்கன்னா you must be a tamil tweeter (சூனாசானா மொழியில், பொர்க்கீஸ்). உங்கள இதுவரைக்கும் படிக்கவெச்சது இந்த பதிவோட டைட்டில்தான் இல்லியா? இல்லன்னா டுட்டர்ஸ இவ்ளோதூரம் வரவெக்கிறது அஜித் டேன்ஸ் மாதிரி, நெம்ப கஸ்டம். அப்புடி என்ன இருக்கு அந்த டைட்டில்லன்னு கேக்கற Non Tweeters, #SuMuWedding இந்த tagஅ டுவிட்டர்ல தேடிப்பாருங்க. 
   கடந்த மாதம் தமிழ் டுவிட்டர் ஒருவருக்கு கன்யாமரி (ஊர்ப்பேர இப்டிதான் சொல்றானுங்க) அருகில் இருக்கும் நாரோயிலில் (இதையும்) கல்யாணம். தமிழகமெங்குமிருந்து சுமார் 50+ டுட்டர்கள் சென்றோம்.
   “ஆறர மணிக்கு அடையார் மச்சி... ஏழுக்கு கிண்டி, ஏழரைக்கு தாம்பரம்.. எட்ர ஒம்போதுக்குள்ள செங்கல்பட்டு தாண்டறோம்...” டொக்டொக் டேபில் மேட் விளம்பரத்த விட அதிகமா இதையே சொல்லிட்ருந்தான் சக ஆர்.கணேசனான கருப்பன். இத்திட்டத்தின் இயக்குனர் (னர்ரா நர்ரா?) கலாசல் மாஸ்டர்.  அது என்னது கலாசல் மாஸ்டர்? கலா மாஸ்டரோட கஸினான்னா… இந்த டுட்டர்களுக்கு தன்னாலேயே அமைந்த ஒரு சிறப்பம்சம் ஹேண்டில் எனப்படும் டுட்டர் ஐடி பெயர்கள். இங்கு பெரும்பாலும் ஒருவரின் நிஜப்பெயர் மற்றவர்களுக்குத் தெரியாது. இந்த ஹேண்டில் நேமை வைத்துத்தான் அறியப்படுவர். அவற்றுள் சில:-
   ஜிரா (சுவிட் பர்ஸன்), காலீஸ், க்யூட்புஷ்பா (யார் சொன்னா? அவங்களே சொல்லிக்கினாங்க), கரடி, மேகத்தைத்துரத்தியவன் (தாலிய அத்துக்கிட்டு ஓடுனவன், பாவாடைய திருடிட்டு போனவன்லாம் எதிர்காலத்தில் வரலாம்), வேதாளம்(அடிக்கடி மு.ம ஏறுவாப்ல), இசைவேந்தன் பொயட்டு, புதியவன் (சுமார் நாப்பதம்பது வருசமா இன்னும் புதுசாவே ஃப்ரெஷ்ஷா இருக்காப்ல இந்த ஜி), ஃப்ரீயாவிடு (என்னது எதுலயா?), கோளாறு (பிரபல டைரக்டர்), பட்டாசு (பிஜிலி வெடி மாதிரியே இருப்பார்), மான்விழியாள், வட்டஜிலேபி, பிசாசு, பிசாசுக்குட்டி, லிங்க்கூ (அதென்னதுடா கூன்னு கேட்டா கெட்டவார்த்த சொல்லிப்புட்டான்), தயிர்வடை, உளவாளி, தோட்டா (இது இல்லன்னா ’துப்பாக்கி’க்கு மதிப்பே இல்லியே, அந்த தோட்டாதான்), பறவை (பறக்குமா? ஆங்.. மெதக்கும்), கபடவேடதாரி, டீகிளாஸ், லல்லி, தம்பியின் தம்பி, வழிபோக்கன், பிழைதிருத்தி, போக்கிரி, அல்டாப்பு, தண்ணிவண்டி, பெரியவாமணி, பரிசல், கப்பல், சுள்ளான், அரகொற, லாரிக்காரன், டான், திருட்டுக்குமரன், ஆந்தைக்கண்ணன், ரைட்டர், அரட்டை, ஆயிரத்தில் ஒருவன், அப்படியா சரி டொய்ங், ரோபல்மேக்ஸ் – ரோபல்காந்த் (அண்ணந்தம்பி), ஜட்டி போடாதவன்(!!!), ஜப்பான் ரகு, பள்கார்பெட்கோ, நிலாபெண், கலக்கல் கபாலி, புத்தகப்புழு, காபுலிவாலா, நாயோன், பேயோன், உளறுவாயன், இளநி வியாபாரி, கிறுக்கி (இது மட்டும் அபுனைப்பேர்) , பப்லூ, எதிர்கட்சி, mr. கொத்தவரங்கா, எமகாதகன், மண்ணின் மைந்தன், சஹாரா, ஆழிமதி, வாட்டகர்வாட், அண்ணே ஒரு வெளம்பரம், பிசாசிஸம், கெக்கெபிக்குணி இந்த மாதிரி பலர். இதுல முத்தாய்ப்பே மாப்பிள்ள பேர்தான்.. ”வாழவந்தான்” (அங்க்கிலானதும் இப்ப வாழவந்தார் ஆகிட்டாரு.) இதுபோக அவரவர் செய்த பொதுச் சேவையைப் பாராட்டி மக்களால் விரும்பிக் கொடுக்கப்பட்ட பட்டங்களும் உள.. செட்டியார் மதர், நாட்டாமை, சித்தப்பு, அக்கா, பாண்டா, லேடி பாண்டா இப்படி டுட்டருக்குள்ள பல ரூபங்களும் சுத்திட்டிருக்கு.
   பொதுவில நாலு டுவிட்டர்கள் பேசும்போது, தெலுங்கு படத்துல ஜோக்குங்குற பேர்ல இருக்குற கொடூரகபிலவஸ்துக்களுக்கு ஏண்டா சிரிக்கிறானுங்கன்னு புரியாம சக ஆந்திரதெலுங்கான நெண்பர்கள பாப்போமே, அது மாதிரிதான் டுட்டர்ஸ பப்லிக் பாப்பாங்க. ஒரு எழவும் அவங்களுக்கு புரியாது. ஆனா டுட்டர்ஸ் வி.பு.சிரிச்சிட்டு இருப்பாங்க.
   இப்பதிவின் ஆரம்பத்தில், ஒருத்தன் "ஆறர மணிக்கு அடையார் மச்சி"ன்னு சொன்னானா? இப்ப இவ்ளோ படிச்சிட்டீங்களா? ஆனா இப்ப வரை வேன் கெளம்பவே இல்லயாம். அந்தளவுக்கு தெறி சொதப்பல் ப்ளான் இது. இவனுங்க வந்து சேர்றதுக்குள்ள ரெண்டு  டீ, ஒரு ரோஸ்மில்க்,15 DM, 30 டுவீட்டு தேத்தினதுதான் மிச்சம். அப்புறம் ஒன்னவர் கழிச்சு அடிச்சு புடிச்சு வந்து சேந்தாங்க. போற வழியில ஒவ்வொருத்தரையா ஏத்திக்கிட்டு தாம்பரத்த தொடும்போது மணி ஒம்பதர. அய்யய்யோ ’பெட்ரோல் பங்க்’ இன்னும் அர மணி நேரத்துல மூடிவானுங்களேனு துடியா துடிச்சு தேவையான அளவு பெட்ரோல், டீசல், இஞ்சின் ஆயில், காத்து(lays)னு  வாங்கி அரசாங்கத்துக்கு பல்க்கா ஒரு வருமானத்த குடுத்துட்டு பஜனைய ஆரமிச்சோம்.
   போற வழியில ஒரு சூரக்கும்பி ஓட்டல்ல டின்னர்க்கு வாய்ல வைக்க முடியாத ஐட்டங்கள (food item) ஆயிரம் தண்டம் அழுது சாப்ட்டோம். கேசவன் மாம்ஸ் அதிகாரமா போய் அங்கருந்த சிடி கடைல சூது கவ்வும் பட டிவிடி கேக்க, டிஸ்டன்ஸ் ஜாஸ்தியா இருந்ததால அவனுக்கு வேற ஏதோ கேட்ருக்கும்போல, கைல கெடச்ச சிடிய ஒரு கவர்ல போட்டு, ”இந்தா புடி, இந்தப்படம் சூத நல்லா கவ்வும்”னு குடுத்து அனுப்ச்சிட்டான். வெற்றி வாகைச்சிரிப்போட வந்து டிவிடியப்போட்டா வில்லு படம் ஓடுது. ஆனானப்பட்ட விஜய் வெறியறான கார்க்கியே ஜன்னல் வழியா எம்பிக் குதிக்கப் போய்ட்டாரு. மாஸ்டர் வாய்ல தேவாரம் திருப்புகழ் ஒலிக்க, நாட்ஸ் தெளிவா, நேராத்தான் ஒக்காந்திருந்தார். ஆனா தலகீழா எதோ யோசிச்சிட்ருந்தார். மாம்ஸ் காதுல அர்த்தஜாம மந்திரங்கள ஓதி, K7ஐ, AK47ஆ மாத்தி, வேற படம் வாங்கியார வச்சோம்.
   இப்படியாக மீண்டும் வண்டி கிளம்ப, அஜித் – விஜய் – ராஜா – ரஹ்மான் – எம்மெஸ்வி, அநிருத் என பல டாப்பிக்கை செந்தமிழன் சீமானைவிட நாங்கள் மஹா உக்கிரமாகப் பேசிக்கொண்டிருக்க, ட்ரைவர் டபக்கெனத் திரும்பி எனக்கு தூக்கம் வருது என்றார். எங்களக் கலாய்க்க சொல்றாரா, இல்ல வேற எதுக்குமான்னு புரிய கொஞ்ச நேரம் ஆச்சு. பிறகு அவரின் உடல்நிலையால்தான் அவ்வாறு கேட்டுள்ளாரே தவிர எங்களை ஓட்டும் உள்நோக்கம் கிஞ்சித்தும் அவருக்கில்லை என அறிந்து கொண்டு, வேனை ஓரங்கட்டி, மஞ்சள் நீராட்டு விழா வயசுப் பெண்ணைப்போல் நடுவில் கார்க்கியை அமர வைத்து நாங்கள் சுற்றி நின்று, தமிழ் சினிமாவின் இன்னொரு முகம், அனுஷ்கா, VJ அஞ்சனா, சினிமா ஆடிஷனில் நடக்கும் காமடிகள், இப்படிக்கதை கதையாய் பேசி நேரத்தைப்போக்கினோம். ஒரு மணிக்கு, நரீ..ஏந்திரிடா கண்ணு என்று ட்ரைவரை எழுப்பி மீண்டும் கிளம்பினோம். [இன்னும் விழுப்புரத்தைக்கூட தொடவில்லை]. அதுக்குள்ள விஜய் டிவி மாதிரி ஆயிரம் ப்ரேக் எடுத்தாச்.
   வண்டி ஏறியதும் ஸ்விட்ச் போட்டதுபோல் தூங்கி விட்டனர் அனைவரும். கிளீனர் உட்பட. ட்ரைவர் என்பக்கம் திரும்பி, ”தூக்கம் வருது” என்பதுபோல் பார்த்தார். கிளீனரை எழுப்பி, “தம்பி, தூக்கம் வந்தா பின்னாடி போ, நா வேணும்னா ஒக்காந்துக்குறேன். நீ இங்க தூங்கினா ட்ரைவருக்கும் தூக்கம் வருதாம்” என நான் சொல்ல, “நா எங்க தூங்குனேன். சும்மா குனிஞ்சிட்டிருந்தேன்” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே தலை தொங்கிவிட்டான். அந்த கற்பாறையை பின் சீட்டுக்கு நகர்த்தி, சிக்கினாண்டா சிவனாண்டி என விதியை நொந்துகொண்டு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். ஒரு வழியாய் உருட்டி திரட்டி மதுரைக்கு அருகில் சென்றபோது, ஆறு மணிபோல் நாட்டாமை எழுந்து என்னை டூட்டி  மாற்றினார்.
   நாட்ஸ் என்னதான் பண்றாரு என பார்த்தபோது டிரைவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். “மரம்லாம் பின்னாடியே போகுதுல்ல? மைலேஜ் என்ன தருது? காக்கா ஏன் கருப்பாருக்கு? வண்டி ஓடும்போது வீல் சுத்துமா?” என்பது போன்ற ராஜ தந்திர கேள்விகளைக்கேட்டு ட்ரைவரை தூங்காமல் ஆக்டிவ்வாக வைத்திருந்தார். (கிசுகிசு: இந்த நேரத்தில் ஒரு விடயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். வண்டிக்கு இரண்டு இஞ்சின்களோ என்று எண்ணுமளவு வண்டிக்குள் ஒரு இஞ்சின் சத்தம்போட்டு தூங்கிக்கொண்டு வந்தது. அது யாரென்பது மக்கள் முதல்வர் யார் என்பதைப் போல ஊரறிந்த விஷயம்.)
   காலை மதுரையில் டிபன்  சாப்பிட்டுவிட்டு (ராஹ்ஜ்ஜா  சாப்பிடும் டிபன் அல்ல, நிஜ டிபன்) பொடி நடையாய் வண்டியைக்கட்டினோம். இதற்குள், ”பாமா கெளம்பியாச்சு, பாமா படிக்கட்டு எறங்கியாச்சு” என்பதுபோல, அவ்வப்போது, திருப்பூர் கோஷ்டி வந்துடுச்சாம், மதுர கோஷ்டி கெளம்பிடுச்சாம், பாட்டில் ஓபன் பண்ணிட்டாங்களாம், கோலா கீழ சிந்திருச்சாம் என அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருந்தன.
   மதியம் ஒருமணிக்கு, வேல்டுலேயே டெம்ப்போ கார் வைத்திருக்கும் ஒரே டுட்டர் கோஷ்டியான நாங்கள் கன்யாமரியை அடைந்தோம். மிகச்சரியாக, ஒன்று:ஒன்று:ஒன்று-க்கு அனைவர் கையிலும் கிளாஸ் (புதியவன், முத்தலிப், லிங்கூ, நாட்டாமை, ராஜன், கார்க்கி போன்ற டீட்டோட்டலர்களைத் தவிர்த்து. We are against திஸ் குடிவெறி & புகைப் பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும் movement you know). இந்த வேதாளம், எனக்கு கிளாஸெல்லாம் பத்தாது நான் உள்ள எறங்கியே குடிச்சுக்குறேன் என லா மார்ட்டினி போத்தலுக்குள், தலைகீழாகத்தான் குதிக்கப்போகிறேனென்று குதித்துவிட்டான்.
   ரோபல்காந்த் & ரோபல்மேக்ஸ் (சத்தியமா இப்ப வரைக்கும் அவங்க பேர் தெரியாது) மற்றும் அவரின் நண்பர், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, கேட்காததையும் வாங்கிக் கொடுத்து மனம் கோணாது பார்த்துக் கொண்டனர். Hugs Mams. மாலை சூரியன் மறைவதைப்பார்க்க, கடற்கரை சென்று சிறிது நேரம் ஆட்டம். போட்டாகிராபர்கள் கிலிக்கி கிலிக்கி என்று சுட்டுத்தள்ளினர். எங்கள எடுங்கடான்னா, அவெங்ய போட்டா எடுக்குறதயே வளச்சு வளச்சு போட்டா எடுத்துக்கிட்டானுங்க. கேட்டா மெட்டா போட்டாவாம்.
    ராவுக்கு, ராவோட ராவாகவும், மிக்ஸிங் சேர்த்தும் Round Floor மாநாடு கூட்டி, Rounds போட்டு, Round கட்டி, லாரி மாம்ஸின் virginityயை verbalலாக, தன் vocabularyயாலேயே கார்க்கி பங்கம் செய்யத்துவங்க, நடு நடுவே அரகொறையும் வட்டையும் மாட்ட, அங்கு நடந்தவை... Censored. ஒரு citizen, ”டேய் வட்ட<beep>” என வட்டயை அழைக்க, ராஜன் சாவதானமாக… ”அதெப்புடி ”<beep>”, வட்ட<beep>ஆ இருக்க முடியும்? வாட்டமாவே இருக்காதே என கௌண்ட்டர் அடிக்க, ரூமில் இருந்த 30+ உருப்படிகள் சிரித்த சிரிப்பு நாரோயில் வரை கேட்டிருக்கும். நல்லவேளை, ”நீல்” வரவில்லை. இந்த <beep> சிச்சுவேசனில் நீலைப் பொருத்திப் பார்த்து இப்போது வரை விபுசிக் கொண்டிருக்கிறேன்.
   நள்ளிரவு டீ குடிக்க ஓரிடத்துக்குச் சென்று அங்கும் அலப்பறை. சமகால சந்து அரசியலை டீ டிக்காஷனோடு கலந்தடித்து குடித்துவிட்டுத் திரும்பும்போது, ஒருவருக்கு ஒன் பாத்ரூம் வர, அது எதோ induced current மாதிரி எல்லாரும் போகணும்னுட்டானுங்க. மல்லையா மட்டும் பாத்திருந்தா நாங்குடுத்த பீரெல்லாம் நீரா போவுதே சத்திவேலுன்னு (அவரோட) மாரப்புடிச்சிருப்பாப்டி. மினி ஆழிப்பேரலையே அடிச்சுச்சு இவனுங்க விட்ட சுஸ்சுல. இப்படியாக, முதல் நாள் ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் அப்போது ஆல்ரெடி இரண்டாம் நாள் ஆரம்பித்துவிட்டிருந்தது.
   மறுநாள் காலை அவித்த இட்டிலிகளை வாயில் தள்ளியபின் மீண்டும் போட்டோ செசன். [கேமராக்கு எத்தன சுச்சி இருக்குன்னு கத்துக்குறானுகளோ இல்லயோ, ஒரு சில்லௌட்டு எடுத்து நட்ட நடுவால பேரப்போட்டு கிலிக்ஸுன்னு தண்ணீர்மதிப்பெண் போட்டுக்குறானுங்க.. வரவர இந்த தொலிலதிபர்கள் தொல்ல தாங்க முடியல.]
   தனி பஸ் பிடித்து கல்யாணத்துக்கு கிளம்பினோம். போகும் வழியெல்லாம் பச்சை பசேல். தமிழ்நாட்டுக்குள்தான் இருக்கோமா என சந்தேகம் வருமளவு பசுமை. விசாரித்ததில் கேரளாவோடு க்ராஸ் செய்யப்பட்ட hybrid வகை belt அது எனத்தெரிய வந்தது. அவ்விடத்தில் கவர்ந்த மற்றொரு விடயம் எங்கும்  நீக்கமற நிறைந்திருந்த தேங்காய்கள். மரத்தில் பார்த்தால் குலைகுலையாய் தேங்காய், கடைகளில் பார்த்தால் அங்கும் சைசுவாரியாக தேங்காய், வீட்டு வாசல்களில் பார்த்தால் அங்கும் கொத்தாய் தேங்காய், இப்டிக்கா திரும்பி ஃபிகர்களைப்பார்த்தால் அங்… சரி விடுங்க.
   கல்யாணம் ஜகஜ்ஜோராக நடந்தது. மாப்பிள்ளையின் பத்து விரல்களில் இருபது மோதிரங்கள் இருந்தன. எம்ஜார் போல் தகதகவென மின்னிக்கொண்டிருந்தார். கழுத, ஒரு கல்யாணத்த செஞ்சு பார்த்துவிட வேண்டுமென்பது மாப்பிள்ளையின் சுமார் முப்பத்தைந்து வருடக்கனவு. அது நிறைவேறியதால், எதையோ சாதித்த தேஜஸ், மாப்பிள்ளை முகம் முழுவதும். கல்யாணத்தை எடுக்காமல், அங்கு வந்த கலர்களைத் தேடித்தேடி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர் மினியேச்சர் ரவிகேசந்திரன்கள் (சைபர் க்ரைம் இவர்களின் கேமராவை செக் செய்தால் கொத்தோடு அள்ளிக்கொண்டுபோகலாம். பூராம் அன் ஆதரைஸ்டு போட்டாக்கள்).
   கல்யாணத்துக்குச்சென்ற மொத்த கும்பலும் மேடையேறி குரூப்பி எடுத்தோம். என்னங்கடா மலமாடு மாதிரி ஒரு கூட்டம் திமுதிமுன்னு என மிஸஸ். வாழவந்தாள் பயந்திருப்பார். பாயாசம் பொரியல் என கலந்து கட்டி அடித்து மிகத் திருப்தியாக விருந்து முடிந்ததும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தால் எங்களை அமரவைத்து விட்டு டிரைவர் சாப்பிடப்போய்விட்டார். இருந்த கடுப்பில், வழக்கம்போல் வட்டயை வம்பிழுத்து, அரகொறயை குனியச்சொல்லி… பச்சகுதிர தாண்டிக்கொண்டிருந்தனர்.
   வண்டிகிளம்பியதும், லிங்காவின் மோனா மோனா அலற, அதற்கு ராஜன் அடித்த மரண ரோபில் கமெண்ட்டை எழுத்தில் கொண்டுவரவே முடியாது. அங்கு இருந்தவர் அனைவருக்கும் அந்த சுக்ஹானுபவ பாக்யம் கிடைத்தது. மீண்டும் அறை வந்து, புகை, குடி, கூத்.. (இகரமல்ல, உகரம்) தொடர்ந்தது. மாலை நான்குக்கு சென்னை டீம் கிளம்பி நிற்க, ஒருவர் மிஸ்ஸிங். ஒரு சிறு வேலையில் அடியேன் பிஸியாக இருந்ததால் லேட்டாகிவிட்டது. என்னை ரௌண்டு கட்டிவிட்டனர். கழிவறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஒரு அரைமணிநேரம் தூங்கிவிட்டேனாம். இதையெல்லாம் ஒரு குற்றச்சாட்டாக பேசுகின்றனர் மன்னா.
   ரிட்டன் வரும்போது கார்க்கி சொன்ன பல ஏ ஜோக்குகளை காதுகுளிர கேட்டுக் கொண்டு வந்தோம். அதிலும் திராட்சைய வெச்சு ஒரு ஜோக் சொன்னார் பாருங்க… சான்ஸேயில்ல. மாஸ்டரும் ரகுசியும் வழக்கம்போல் சந்தில், (வயதான) ஜடைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டுவர, இங்லிஸ் ப்ரொபசர் தயிர்வடையிடம், நுப்பது நிமிடத்தில் நுனிநாக்கு இங்லிஸ் கற்றுக்கொண்டு வந்தோம் (A for arakora - அரகொற, B for Bend - குனி). இரவு மதுரை அருகே ஓரிடத்தில் செம டின்னர்(உண்மைலயே செம ருசி). நாட்டாமையும் மாஸ்டரும் ஆபாயில்களாக வாயில் தள்ளிக்கொண்டே இருந்தனர். இந்த கருப்பன் ஆபாயில்களை உறிஞ்சவெல்லாம் செய்கிறான். வாய்லயே என்னவெல்லாம் கலை கத்துவெச்சிருக்கான் தெரியுமா மக்களே இந்தக் கருப்பன்? ச்சமத்துப் பிள்ளையாய், கவிச்சி தவிர்த்து, ஆச்சாரமாய் கார்க்கியும் நானும் நான்கே நான்கு சைசை மட்டும் உண்டோம். வீ ஆர் ஃப்ரம் அ எச்சுக்கேட் ஃபேமிலி யூ நோ.
   இரவு உறங்கப்போகுமுன், நல்லபடியாக எங்களை கவனித்து சிறப்பித்த மாப்பிள்ளைக்கு நன்றி தெரிவிக்கலாமென்று கால் செய்தால், ”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தற்சமயம் பிசியாக இருக்கிறார். பிறகு முயற்சிக்கவும்” என்றது ஒரு கன்னிணிக்குரல்.

3 comments :

Pass a comment here...

AddThis